பக்கம்:இல்லற நெறி.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக் கலை 397

களையும் பொறுத்தே இந்த மகிழ்ச்சியின் அளவும் மாறுபடு கின்றது என்று கருதலாம். மேலும் இருவரிடையேயும் உச்ச நிலை உணர்ச்சி ஒரே காலத்தில் ஏற்படுங்கால் பெண் தனது பாலுறுப்புகளில் ஏற்படும் சுருக்கங்கள் போன்றவற்றை உணர முடிவதில்லை; ஆணும் பெண்ணுறுப்புகளில் நடை பெறுவனவற்றை உணர முடிகின்றதில்லை. எனினும், உச்ச நிலை உணர்ச்சியுடன் ஏற்படும் திடீரென இறுக்கம் தளர்தல், ஓய்வு ஏற்படல், முடிவுற்ற உணர்ச்சி போன்றவற்றை இரு வருமே உணர முடிகின்றது.

பெண்களிடம் பால்துலங்களின் அளவுகள்: பெண்களின் பால்துலங்களின் அளவுகளிலும் அவர்களிடம் ஏற்படும் மன நிறைவு பெறும் உற்சநிலை உணர்ச்சியின் அளவிலும் மிக அதிகமான வேறுபாடுகள் காணப்பெறுகின்றன. திருமணம் முடிந்த தொடக்கக்காலத்தில் ஒருபெண்ணின் காம இச்சை கள் உறங்கிய நிலையிலிருக்கலாம். ஆகவே அப்பொழுது அவளிடம் புணர்ச்சிக்குரிய காதல் சார்ந்த துலங்கலே ஏற் படாமலுமிருக்கலாம். இச் சமயத்தில் இருபாலாரிடையே யும் உச்சநிலை உணர்ச்சி ஒரே காலத்தில் ஏற்படவேண்டும் என்று கவலைப்பட வேண்டியதில்லை கணவனிடம் பொறு மையும் ஒத்துணர்ச்சியுடன் புரிந்துகொள்ளும் மனப்பான் மையும் இருப்பின், விரைவில் அவன் இணையும் பொறுத்தப் பாட்டினை அடையலாம். பெண்ணின் எதிர்வினை புரியும் காலம்?? குறைவாக இருந்தாலும் அவள் உச்சநிலை உணர் வினை அடையக்கூடியவளாக இருப்பின், இதில் யாதொரு சங்கடமும் ஏற்படக் காரணம் இல்லை. பெண்ணை அணுகு வதிலும் அவளிடம் தூண்டலை விளைவிப்பதிலும் நுட்பமான முறைகளை மேற்கொள்ளல், புணர்ச்சியின்பொழுது தம்பதி கள் மேற்கொள்ளும் பல்வேறு நிலைகள், காமக் களியாட்டத் தில் கூருணர்வுடனும் திறமையாகவும் இருத்தல் ஆகியவற் றைக் கொண்டு சிறிது காலத்திற்குள் பெண்ணிடம் கிளர்ச்சி யெழசி செய்து அதனல் அவள் பெறும் உச்சநிலை உணர்ச்சி

19. எதிர்வினை புரியும் காலம்-Reaction time

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/403&oldid=598432" இலிருந்து மீள்விக்கப்பட்டது