பக்கம்:இல்லற நெறி.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402

இல்லற நெறி


இவர்களுல் ஒன்றுபட்ட வகையினர் இணையுங்கால் பல் வேறு ஒத்தப் பாலுறவுகளும், மாறுபட்ட வகையினர் இணையுங்கால் இன்னும் அதிகமாகப் பல்வேறு ஒவ்வாத பாலுறவுகளும் ஏற்பட்டு எண்ணற்ற வகையான பாலுறவு களை உண்டாக்குகின்றன.

புணர்ச்சி நிலைகளால் தாம்பத்திய உறவு சிறத்தல் : மேற் குறிப்பிட்ட வாத்ஸ்யாயனர் கண்டறிந்த பல்வேறு புணர்ச்சி நிலைகளால் தாம்பத்திய உறவு பல்லாற்ருனும் சிறக் கின்றது என்பதை நீ நன்கு உணரவேண்டும்: முதலாவதாக, இந்நிலைகளை மேற்கொள்வதால் தம்பதிகளிடையே இயல் பாக அமைந்துள்ள ஒவ்வாத கூறுகள் குறைக்கப்பெறு கின்றன. இரண்டாவதாக, தம்பதிகள் சிலசமயம் இப் புணர்ச்சி எப்பொழுதும் ஒரே மாதிரி உள்ளதே என்றும், தம் முடைய வயது நிலை, ஆண்டின் பருவநிலை, தம்முடைய மீப் பண்பு நிலை, தம்முடைய தனிப்பட்ட சிறப்பியல்புகள் ஆகியவற்றிற்கேற்றவாறு மாருதுள்ளதே என்றும் ஒருவித சலிப்புடனிருக்கும்போது அச்சலிப்பினை நீக்குவதற்கு இந் நிலைகள் பயன்படுகின்றன. மூன்ருவதாக தம்முடைய பாலுறுப்புகளின் அமைப்பின் காரணமாக ஒரு குறிப்பிட்ட புணர்ச்சி நிலையில் திருப்திகரமாக உச்சநிலை உணர்ச்சியினை அடைய முடியாத பெண்கள் தமக்குப் பொருத்தமான வேருெரு புணர்ச்சி நிலையினை மேற்கொண்டு இந்த உணர்ச் கியை அடைய முடிகின்றது:

புணர்ச்சி நிலைகளின் பிரிவுகள்: மேலே குறிப்பிட்ட பல் வேறு புணர்ச்சி நிலைகளையும் நாம் நடைமுறையில், பயனை அடிப்படையாகக் கொண்ட சாதாரண கிலைகள் என்றும், விடுப்பையும்" (அறிவார்வம்), வகைப் பெருக்கத்தையும்?! அடிப்படையாகக் கொண்ட புதிய முறைகள்” என்றும் இரு

88. Lit 59 pas—Sex union 90, so Gilli-Curiosity 91. வகைப் பெருக்கம்-Variety

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/408&oldid=1285272" இலிருந்து மீள்விக்கப்பட்டது