பக்கம்:இல்லற நெறி.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக் கை 萤伊韩

காறும் இத்தகைய முழுமையான இன்பத்தை அடைய வில்லையே என்ற உணர்ச்சியையும் பெறுகின்றனர். ஆணுல், சில புணர்ச்சி நிலைகளில் ஆணிடம்விந்து வெளிப்பட்டாலும், பெண்ணிடம் உச்சநிலை உணர்ச்சியும் ஏற்பட்டாலும், இருவரும் அன்று உண்மையானநிலை அன்று என்பதாகவே உணர்கின்றனர். ஆடவன் தன்னுடைய விந்து முழுவதும் வெளிப்படவில்ேைய என்ற உணர்ச்சியை அடைகின்ருன்; பெண்ணும் முழு இறுக்கமும் விடுவிக்கப்பெறவில்லையே என்று கருதுகின்ருள். ஆகவே, மணமக்கள் தத்தமக்கு எளிதாகவும் பயனுள்ளதாகவும் உள்ள புணர்ச்சி நிலைகளையே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்; அவர்கள் ஏட்டுச் சுரைக்காயைக் கறியாக்க முயலவே கூடாது.

காம நூல்: இணைவிழைச்சு பாலுறவில் ஒர் இன்றியமை யாத பகுதியாகும். வாத்ஸ்யாயனர் இப்பகுதியை விரிவாக வும் விளக்கமாகவும் கவர்ச்சித் தரும் முறையிலும் விரித் துரைக்கின்ருர். கணவன் மனயை ஆட்கொள்ளுவதற்கும், முதன் முதலாக அவளிடம் புணர்ச்சியை மேற்கொள்வதற் கும் விரிவான நடைமுறைக் குறிப்புகளையும் தருகின்ருர், பண்டைய அறிஞர்கள் தம்பதிகளிடையே வெற்றிகரமான தும் இன்பத்தை நல்குவதுமான பாலுறவினை ஏற்படுத்துவத னேயே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தனர். இன்பம்: மகிழ்ச்சியை விடப் பலகோடி மடங்கு பெரியது. ஆகவே, அவர்கள் பால்வாழ்க்கையைக் கலையுணர்வுடன் நடத்த வேண்டும் என்று கவலையுற்றனர்; இதில் ஒவ்வொரு கூடலும் முக்கிய பங்கினைப் பெறுதல்வேண்டும் என்றும் விழைந்தனர். ஆடவனின் நோக்கம், பென்னின் நோக்கம், பிள்ளைப் பேற்றின் நோக்கம், இன்பத்தின் நோக்கம், கலையுணர்வு முதலிய அனைத்தும் பொருந்திய ஏற்பாட்டினைக் கண்டினர். இத்தகைய ஏற்பாடுதான் காமநூல். ஒவ்வொரு தம்பதியும்

95. gást tilh–Happiness 96. Inêgê8—Pleasure

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/415&oldid=598459" இலிருந்து மீள்விக்கப்பட்டது