பக்கம்:இல்லற நெறி.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414

இல்லற நெறி


காலத்தில்தான் தன் கணவனின் பால் திறன்களும், தன்னு டைய பால் திறன்களும், இருவருடைய எதிர்வினைகளும் ஒரு பிரச்சினையாக எழவில்லை இன்று கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் திருப்தியான முறையிலுள்ள பாலுறவின் முக்கியத்துவத்தைப் பெண்கள் உணர்ந்து கொண்டுவிட்ட தால் அவர்கள் பால்பொருத்தக் குறைகளையும் பொருத்தக் கேடுகளையும் நன்கு என்ணத் தொடங்கிவிட்டனர். நவீன வாழ்க்கையிலுள்ள இறுக்கங்கள். பாதுகாப்பின்மைகள், உள்ளக் கிளர்ச்சி முரண்பாடுகள் போன்ற கூறுகள் பால் பற்றிய ஏலாநிலைகளை அதிகமாக்கிவிட்டன என்பது மற் ருெரு பொருத்தமான காரணமாகும் இயல்பூக்க உந்தல்கள், சமூக செல்வாக்குகள் என்ற இருகூறுகளால் மானிடப் பால் நடத்தை அறுதியிடப்பெறுகின்றது. நம் முடைய சமூகத்தில் சமூகம் பால்பற்றிய நடத்தையில் பெரும்பங்கு கொண்டுள்ளது. ஆதலின், விருப்பங்களுக்கும் உள்தடைகளுக்குமிடையே அடிக்கடி முரண்பாடு எழு கின்றது. பழங்கால மக்களிடையே சமூக வாழ்வு பால் பற்றிய எண்ணங்களும் எளிய முறையிலிருந்ததால் பால் பற்றிய குறைபாடுகள் கவனத்திற்கு வந்ததில்லை. எனினும், நம்முடைய பண்பாட்டில் அன்ருட வாழ்விலுள்ள பல்வேறு இறுக்கங்கள் பால் செயலிலும் பால் திறனிலும் குலைவான விளைவினை உண்டாக்கியுள்ளன. இத்தகைய இறுக்கங்கள் ஒரு தம்பதிகளின் பால்வாழ்க்கையில் பல்வேறு பொருத்தக் கேடுகளை விளைவித்தல்கடும்.

பாலுறவில் சங்கடங்கள்: பாலுறவுபற்றிய சங்கடங்கள் திருமண உறவு ஏற்பட்ட தொடக்கத்திலேயே நேரிடுகின் றன. முதல் கில வாரங்கள் அல்லது மாதங்கள் இவை பொறுக்கமுடியாத நிலையிலும் இருத்தல்கூடும். எடுத்துக் காட்டாக, பாலுறவு முற்றுப்பெறுவதிலேயே சங்கடங்கள் எதிர்ப்படலாம். அஃதாவது, ஆண்குறியை யோனிக் குழ வில் நுழைப்பதிலேயே பல்வேறு தொல்லைகள் நேரிடலாம். புதிதாக மணந்துகொண்ட தம்பதிகள் புணர்ச்சியை முற்ற

6, S7ærriffè0–Disability

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/420&oldid=1285278" இலிருந்து மீள்விக்கப்பட்டது