பக்கம்:இல்லற நெறி.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் 磁球常

'கன்னிச்சவ்வு காணப்பெற்றது. கணவனுடைய ஆண் மைக்கு லவி அவாவிக்கும் குறைவில்லை. ஆயினும் குறி யைச் செலுத்துதல் இயலாததாகவே இருத்தது. கணவன் இணைவிழைச்சு புரிய முயன்ருல், மனைவிபயத்து நடுங்குவாள்; கணவன் தன்னை அணுகுவதற்குத் தடை செய்து எதிர்த்து நிற்பாள். இருவரும் முற்றுப்பெறக்கூடிய இணைவிழைச்சினே எதிர்நோக்கியே இருந்தனர்; தாம்சந்திக்கும்பொழுது எதிர் பாராத தடைகள் நேரிடுவதைப்பற்றிக் குழப்பமடைத் திருத்தனர். ஆல்ை, அவர்கள் தம் உடலிலுள்ள ஏதோ ஒர் இயல்பிசத்த அமைப்பினுல் பாலுறவு புரிய முடியவில்லை என்று உறுதியாக நம்பினர்; பால்பொருத்தத்திலும் , வர் களிடம் பொருந்தாத இணைப்பு ஏற்பட்டுவிட்டது என்றும் இயல்பாகவே தம்மிடம் பொருத்தப்பாடு இல்லையென்றும் கருதினர். அவர்களே மருத்துவர் சோதித்ததில் மனைவியின் உடலியலில் கோளாறு இல்லையென்பதும், ஆண்குறி உள்ளே செல்ல முடியாமைக்கு அவளிடம் ஏற்பட்டுள்ள ஒரு தசை வலிப்பே காரணம் என்பதும் தெரியவந்தன. அவளுடைய யோனிக்குழலின் வாயிலைச் சுற்றிலுமுள்ள தசைகள் மிகவன்மையாகவும் தாமாகவும் சுருங்கியிருந்தன; இதுவே குறி நுழைவதற்குத் தடையாக இருந்தது.

மேற்குறிப்பிட்ட வலிப்பு சில சமயம் யோனிக் குழல் சுருக்கம்' என்று வழங்கப்பெறும். சாதாரணமாக இது திருமணத்தின் தொடக்கத்தில் ஏற்பட்டுப் பால்பற்றிய சங்க டங்களை விளைவிக்கும். இந்தத் தடை ஒருவித மறிவினை" யாகும். அது பெண்ணின் விருப்பார்ந்த கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. பெண் எல்லாக் கூறுகளிலும் சாதாரண மானவளாகவே இருப்பாள்; அவளிடம் மிகத் தீவிரமான பால் விருப்பங்களும் இருக்கும். பால் தழுவலுக்கு விருப்ப

مسوم مwسم. يسمبر

7. 360&as still-Muscular spasm 8. யோனிக்குழல் சுருக்கம்-Vaginimus 2. upocaär-Reflex action

@一27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/423&oldid=598477" இலிருந்து மீள்விக்கப்பட்டது