பக்கம்:இல்லற நெறி.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் 419

திக் கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக அவள் தன் பின்புறுப்புப் பகுதிக்கு எந்தவிதமான தீங்கும் ஏற் படக் கூடாதென்று ஒருவித பாதுகாப்புணர்ச்சியை வளர்த் துக்கொண்டு வருகின்ருள்: பிற்காலத்தில் அந்த இளம் பெண் பால் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற்றுவிட்டா லும், அவளிடம் பிள்ளைப் பிராயத்தின் பாது சாப்பு மனப் பான்மைகளும் உள் தடைகளும் விடாமல் தங்கியிருத்தல் கூடும். இவை திருமணத்திற்குப் பிறகு அவளுடைய பால் பற்றிய எதிர்வினைகளிலும் துலங்கல்களிலும் தலையிடுதல் கூடும். அவள் தன் எண்ண மின்றியே புணர்ச்சியினின்றும் பின்னிடக் கூடும்; இஃது அவளிடம் பிறப்புறுப்பு வலிப்பு வடிவில் ஒரு பாதுகாப்புப் பொறி நுட்பமாகத் தோற்ற மளிக்கும். திருமணத்திற்குப் பின்னர் சாதாரணமான பாலுறவுகள் ஏற்பட்ட வுடன் இத்தகைய தொடக்கக் கால இறுக்கங்களும் தடைகளும் மறைந்து விடும் என்பது. உண்மையாயினும், சில சமயம் அவை நீண்ட காலம் வரை யிலும் ஒரு பெண்ணிடம் நீடிக்கவும் செய்யு ; குறிப்பாகக் கணவன் திறமையின்றியும் தடுமாற்றமுடனும் புணர்ச்சியை மேற்கொண்டால் அவை நிச்சயம் தலைக்காட்டும். திருமணச் சடங்கு ஒரு பெண்ணிற்குச் சட்டப்படியும் சமூக அங்கீகார முறைப்படியும் பாலுறவுகளே அளித்து விட்டபோதிலும், அவள் உடனே தான் லாழ்நாட் காலம் முழுதும் சேர்த்து வைத்துள்ள உள் தடைகளையும் விலக்குணர்ச்சிகளையும் களைந்து எறிந்துவிடுவதென்பது அவ்வளவு எளிதன்று: கணவன் தன் மனப்பான்மையிலும் நடத்தையிலும் பொருமையற்றவகைவும் இரக்கக் குணமில்லாதவனகவும் இருந்துவிட்டால் அவன் அவளுடைய கவலைகளைப் பெருக்கி அவளுடைய தடையினை அதிகரிக்கச் செய்துவிடுவான்.

அச்சங்களைப் போக்கும் வழி : இத்தகைய அச்சங்களைப் போக்குவதற்கு வழியொன்றுமில்லையாஎன்று நீவினவலாம். உண்டு; கூறுவேன். வந்தபின் காப்பதைவிட வருமுன் காப்

15. Lirassrúlio Quiroglo-Lib-Defense mechanism

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/425&oldid=598481" இலிருந்து மீள்விக்கப்பட்டது