பக்கம்:இல்லற நெறி.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428

இல்லற நெறி


பற்றி எச்சரிக்கப் பெற்ருல், அவளிடம் பால் இயல்பாகவே தவருனது நாணப்படக் கூடியது. பாவமானது என்ற தீவிர மான எண்ணம் வளர்தல் கூடும். திருமணத்திற்குப் பிறகும் இவ்வெண்ணத்தை அவளால் மாற்றி க் கொள்ள முடிவதில் ல: அவளிடம் அறிவு வளர்ச்சி நன்முறையில் ஏற் பட்டிருந்தாலும், பிள்ளைப் பருவத்தின் அச்சங்களும் உள் தடைகளும் 2ள்ளது.இளர்ச்சியின் அடிப்படையில் அவளே அடிமையாகவே இருக்கச் செய்கின்றன. அன்ருட வாழ்க்கை யில் இதற்குப் பல எடுத் துக்காட்டுகளைக் காணலாம்:

சில பெண்களிடம் திருமணம் ஆகியும் யாதொரு மாற்ற மும் ஏற்படுவதில்லை. ஒரு பெண்ணிடம் அங்ங்ணம் பால் விருப்பமின்மை ஏற்படுவதற்கு அவளுக்குப் துணைவகை அமைந்த கணவனிடம் அமைந்த பல கூறுகளும் காரணமாக அமைகின்றன. சாதாரணமாகப் பெண்ணின் பால் துலங்கல் கள் அவளுடைய உள்ளக்கிளர்ச்சி எதிர்வினைகளுடன் நெருங் கிப் பிணைந்துள்ளன. மேலும், அவை அவள் தன்னுடைய கணவன்மீது கொண்டுள்ள மனப்பான்மையையும் பொறுத் துள்ளன. தான் காதலே கொள்ளாத அல்லது யாதொரு உறவும் இல்லாத ஒரு பெண்ணிடம் பாலுறவு கொள்வதால் ன் திருப்தியைப் பெறலாம். எனினும், ஒருபெண் தான் له ساتيني அன்பு கொள்ளாத ஆடவனிடமோ, அல்லது தன்னிடம் பரிவையும் பிரியத்தையும் காட்டாத ஆடவனிடமோ பால் துலங்கலைப் புரிதல் முடியாது; அவனிடம் கொள்ளும் உறவி ல்ை இன்பத்தையும் அடைதல் முடியாது. எனவே ஒரு மனைவி தன் கணவன்மீது கொள்ளும் பால் எதிர்வினைகள் அவன் தன்னை ஒரு தனியாளாக மதித்தலையும், அவன் தன் மீது கொள்ளும் மனப்பான்மையையும், தன்மீது காட்டும் அக்கறையையும் தன்னுடன் பழகும் முறையையும் பொறுத் துள்ளன. இவற்றில் கணவன் தவறில்ை மனைவியும் நாளடைவில் அவனிடம் பாலுறவு கொள்ளும் கவர்ச்சியினை இழத்தல் நேரிடும். கணவனுடைய இக்குறைகளும், அவனது ஒழுக்கக் குறைவும் எத்தனையோ பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளதை இன்றைய வாழ்க்கையில் காணலாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/434&oldid=1285286" இலிருந்து மீள்விக்கப்பட்டது