பக்கம்:இல்லற நெறி.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432

இல்லற நெறி


துலங்கல் இராவிட்டால், தன்னுடைய கணவனின் விருப்பமும் குறைந்து போதல் கூடும் என்றும், தன்னுடைய நன்மையின் பொருட்டும் மணவாழ்க்கையின் இன்பத்தின் பொருட்டும் தானும் பால்துலங்களிலும் பாற்கவர்ச்சி யிலும் அக்கறைக் கொள்ள வேண்டியது மிகவும் இன்றி யமையாதது என்றும் ஒவ்வொரு பெண்ணும் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

இன்னுெரு முக்கிய செய்தியையும் ஈண்டுக் கூறுவேன். உண்மையிலேயே மனைவியின் பால் விருப்பம் தீவிரமாக இரா திருப்பினும், அவள் தான் கலவியில் அக்கறைகொள்ள வில்லை என்ருே, அல்லது தன்னிடம் பால்துலங்கல் இல்லே யென்ருே தன் கணவனிடம் அடிக்கடித் தெரிவிக்க வேண்டி யதில்லை; தெரிவிக்கவும் கூடாது. சில சமயங்களில் அவள் கலயிலேயே அக்கறை கொள்வது போன்ற தூண்டலை மேற்கொள்வதும் நன்று; கலவியினையே தொடங்குவதில் ஊக்கம் காட்டுதல் சிறந்தது. இதல்ை அவர்களிடம் சிறந்த திருமண இனக்கம் ஏற்படுவதுடன், பாலுறவில் அவளு டைய கருத்தின்மையையும் படிப்படியாகத் திருத்திக் கொள்வதற்கும் இஃது ஒரு வழியாகவும் அமைகின்றது. மணமக்களிடம் திருமண உறவு சிறப்பாக அமைய வேண்டு மாயின் அவர்கள் இருவருடைய ஒத்துழைப்பும் ஒவ்வொரு படியிலும் மிகவும் வேண்டற்பாலது.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/438&oldid=1285288" இலிருந்து மீள்விக்கப்பட்டது