பக்கம்:இல்லற நெறி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இல்லற நெறி


இயலாத செயலாகுமா என்ற நிலையினைத் தீர்மானித்தல் இயலும்;

Rh கூறு: அண்மையில் குருதி ஆராய்ச்சியில் Rh கூறு என்பதாக ஒரு கூறினைக் கண்டறிந்துள்ளனர். இது குருதி யிலுள்ள ஒரு பிரத்தியேகமான பொருள் Rhesus என்பது ஒருவகைக் குரங்கு; முதன் முதலாக இப்பொருள் அவ்வகை குரங்கினிடம் கண்டறியப்பெற்றதால் அதன் பெயரில் முதல் இரண்டெழுத்தாகிய Rh என்பதாலேயே அப்பொரு ளுக்குப் பெயரிடப்பெற்றது. வெள்ளையரில் 85 விழுக்காடு தம் குருதியில் இப்பொருளைக் கொண்டவர்கள்; இவர்களை "Rh பாஸிட்டிவ் என்று வழங்குவர் எஞ்சிய 15 விழுக் காட்டு மக்களின் குருதியில் இப்பொருள் இல்லை. அவர்கள் "Rh நெகட்டிவ் என வழங்கப்பெறுகின்றனர். நீக்ரோக் கள் சீனர்கள் போன்றவர்களுள் Rh பாஸிட்டிவ் மக்கள் 85 விழுக்காட்டிற்குமேல் அதிகம் உள்ளதாகக் கூறப்பெறு கின்றது.

ஒர் Rh பாஸிட்டிவ் ஆடவன் ஒர் Rh நெகட்டிவ் பெண்ணை மணந்து அவர்கட்குப் பிள்ளைப் பேறு ஏற்படு மாயின், அவர்கட்குப் பிறக்கும் குழவிகளில் சிலருக்கு, பிறப் பின்பொழுது அல்லது பிறந்த சில நாட்களில் எரித்ரோ பிளாஸ்டாவிஸ்" என்ற அபாயகரமான நிலை ஏற்படும். குழந்தைகட்கு ஏற்படும் குருதிச் சோகை , மஞ்சட் காமாலை , உடல் வீக்கங்கள் போன்ற குறிகளால் இந்நிலை அறியப்படும். சில சமயம் குழந்தை இந்நிலையினல் பிறப்ப தற்கு முன்பே மரித்துப்போவதுமுண்டு. எனினும், இங்ங்னம் பிறந்த 150 அல்லது 200க்கு ஒரு குழந்தைக்கே எரித்ரோ பிளாஸ்டாஸிஸ் என்ற நிலை ஏற்படுகின்றது என்றும், குழந்தை பிறந்தவுடனே புதிதாகக் கண்டறியப்பெற்ற முறைகளால் குருதியைச் செலுத்தி இவ்வாறு பாதிக்கப்

37. ¿Tiñá;37T 133irmão Lirofloñ)--Elythroblastasis. 38. @@ğ& G&mgo5–Anaemia? 39. மஞ்சட்காமாலை-laundice.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/44&oldid=1285097" இலிருந்து மீள்விக்கப்பட்டது