பக்கம்:இல்லற நெறி.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440

இல்லற நெறி


திருப்தியடைதல் கூடும் என்பதை உனக்கு வற்புறுத்த விரும்புகின்றேன். ஒரு சில பெண்கள் உரையாடலின் மூல மோ அல்லது ஒரு நூலின் மூலமோ அறியும்வரை. உச்சநிலை உணர்ச்சி இன்னதென்பதையே அறியாதிருப்பது அண்கடு; அதன் பிறகுதான் அவர்கள் தம் கலவியநுபவங்களால் அடையமுடியாத முழு மன நிறைவைப்பற்றிக் தலைப்படு கின்றனா. இலக்கியங்களில் வரும் உச்சநிலை 莒。岔学母剑 வைப் பற்றிய வருணனைகள் யாவும் குறிக்கோள் நிலையைக் குறிப்பிடுவனவேயன்றி உண்மை நிலையைக்குறிப்பிடுவதில்லை என்பதையும் நீ உணர்தல் வேண்டும். அவை ஆடவர்களே வும் மகளிர்களையும் அநுபவத்தில் காணமுடியாத உணர்ச்சி வினைப் பெறுதல் வேண்டும் என்ற எண்ணத்தில் கோண்டு செலுத்துகின்றன.

தாம்வீழ்வார் மென்ருேள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணுன் உகுை. *

தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்ருல்

அம்மா அரிவை முகக்கு."

விழும் இருவர்க் கினிதே வளியிடிை

போழப் படாஅ முயக்கு.* என்ற குறள்மணிகளில் குறிப்பிடப்பெறும் அதுபவங்கள் யாவும் குறிக்கோள் நிலையினவே. உச்சநிலை உணர்ச்சியைத் தான் வள்ளுவப் பெருந்தகை முயக்கு’ என்று குறிப்பிடு கின்றர் என்று கருதலாம். ஆனந்த வெள்ளம்” என்று மணி வாசகப் பெருமாள் குறிப்பிடுவதும் இதுவே என்க. இப் பாடல்களைப் படிக்கும் ஆடவரும் மகளிரும் அத்தகைய அநுபவங்களே எதிர்பார்ப்பது இயல்பே. ஆல்ை ஒரு சராசரி ஆடவரிடமோ, அல்லது மகளிரிடமோ இத்தகைய அநுபவங்களே எதிர்பார்த்தல் முயற்கொம்பாகும்.

89. குறள்-1105.

40. குறள்-1107.

41. குறன்-1108.

42. திருக்கோவையார்-307.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/446&oldid=1285292" இலிருந்து மீள்விக்கப்பட்டது