பக்கம்:இல்லற நெறி.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் 443

யும் நனவு முறையிலும் நனவிலிமுறையிலும் அவளிடம் அமைந்து கிடக்கும் அச்சங்களையும் களைவது அவசியமா கின்றது. சில பெண்களிடம் ஹார்மோன் சிகிச்சை பயன் தருதல் கூடும்; சுரப்பிக் கோளாறுகள் உள்ளவர்களிடமே இதனை மேற்கொண்டால் பயனளிக்கும். இந்நிலையைச் சமாளிப்பதில் மருத்துவருடைய திறமை பெரும்பங்கு பெறு கின்றது என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை.

கணவன் மனைவியை அணுகும் முறையைப்பற்றி ஏற் கெனவே குறிப்பிட்டுள்ளவற்றையெல்லாம் ஈண்டு நினைவு கூர்க. பாலுறவு கொள்வதற்குமுன் காதலுடாட்டமும் மனைவியைத் துண்டி அவளிடம் புணர்ச்சித் துடிப்பும் அவசியம் உண்டாக்க வேண்டும் என்பதை என்றும் நினைவி விருத்துதல் வேண்டும் மனைவியிடம் காமக்கிளர்ச்சியும் புணர்ச்சித் துடிப்பும் நன்கு ஏற்படாதவரையில் கணவன் தன் குறியை யோனிக்குழலில் நுழைத்தல் கூடாது. அன்றி யும், அவன் இயன்றவரை புணர்ச்சியையும் நீடித்து மனைவி யும் முழுமையாகத் துலங்குவதற்கு வாய்ப்பினை நல்குதல் வேண்டும்,

முன்னெருகடிதத்தில் வாத்ஷயாயனர் கண்டறிந்துள்ள பல்வேறு புணர்ச்சி நிலைகளையும் அவற்றின் இன்றியமை யாமையையும் குறிப்பிட்டேன் அல்லவா?4 அவற்றுள் யாதாவது பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்து மேற் கொண்டு இவ்வாய்ப்பினை நல்கலாம். சில பெண்களிடம் பாலுறுப்புகளின் அமைப்பில் இயற்கையிலேயே அமைந் துள்ள கோளாறுகளின் காரணமாக இயல்பாக யாவரும் மேற்கொள்ளும் புணர்ச்சிநில்ை பொருந்தாமல் இருக்கலாம்; ஒரு குறிப்பிட்ட புணர்ச்சிநிலை செளகரியமாக அமைந்து மன்னவியிடம் நல்ல பால்துலக்கம் ஏற்படலாம். தம்பதிகள் தமக்குள்ளே கலந்துயோசிப்பதில் யாதொரு தயக்கமுமின்றி தமக்குப் பொருத்தமான பால் விளையாட்டு வகைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் வேண்டும். தம்முடைய

48. இந்நூல் பக்கம்-40 :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/449&oldid=598533" இலிருந்து மீள்விக்கப்பட்டது