பக்கம்:இல்லற நெறி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணப்பொருத்தம் 39

பெற்ற ஏராளமான குழவிகளின் உயிர்கள் பாதுகாக்கப் பெறுகின்றன என்றும் அண்மையில் கண்டறியப்பெற்ற புள்ளி விவரங்களிலிருந்து அறியக் கிடைக்கின்றது. இதல்ை திருமணம் புரிந்து கொள்வதற்கு முன்னர் தம்பதிகள் Rh கூறுக்குக் குருதிச் சோதனை செய்து கொள்வது உகந்தது தான என்று நீ கேட்கலாம் ஆம்; இயலுமாயின் செய்து கொள்வது நல்லதே. ஒருவருடைய குருதி ஒத்திராவிடில், இம்முடிவினல் மட்டிலும் அவர் குழந்தை பெறுவதற்கு உகந் தவர் அல்லர் என்பது பொருளன்று. Rh கூறுகள் பொருந் தாத பெரும்பாலான தம்பதிகள் ஒரு குழந்தையைப் பெறு கின்றனர்; அவர்கள் சங்கடங்கள் யாதொன்றுமின்றிப் பல குழவிகளையும் பெறலாம். இத்துறையில் ஆராய்ச்சி வேக மாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது; குருதிப் பொருத்தமின்மையை எவ்வெவ்வாறெல்லாம் சமாளிப்பது என்பது பற்றி ஆராய்ச்சிகள் நடைபெற்றவண்ணமுள்ளன:

உடல் நலப் பொருத்தம்: இதுகாறும் கூறியவற்றிலிருந்து ஒருவருடைய உள்ளம் திருமணப் பொருத்தத்திற்கு மிகவும் இன்றியமையாதது என்பதை நீ அறிந்து கொண்டிருப் பாய் இஃது எல்லாருக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் பொருந்தக்கூடிய உண்மை, கல்லீரல் சரியாக இல்லாத ஒரு வருக்குச் சரியாகப் பசி இராது; உண்ணும் உணவும் நன்கு சீெரிக்காது. இத்தகைய உடல் நிலையைக் கொண்ட ஒருவர் செய்து கொள்ளும் எல்லா வகைப் .ெ பா. ரு த் த ங் களு ம் உடைய திருமணம் வெற்றியடையாது போதலும் கூடும்: எனினும், பொதுவாகப் பார்த்தால் சரியான உடல் நலம் திருமணத்திற்கு இன்றியமையாதது என சொல்வதற்கில்லை. எடுத்துக்காட்டாக ஒருவருக்கு இளமையில் ஏற்பட்ட நச்சுக் காய்ச்சலால் அவருடைய சிறு நீரகங்கள் தீராத நிலையில் பாதிக்கப் பெற்றிருக்கலாம்; அல்லது ஒரு சமயம் அவர் கீல் வாதத்தால் தாக்குண்டு அவருடைய இதயம்: பாதிக்கப்

40: p33&# 35itulégé)—Scarlet fever. 4 J. $60+urtAğıb --Rheumatism, 42, (3)ätutb-Heart,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/45&oldid=598535" இலிருந்து மீள்விக்கப்பட்டது