பக்கம்:இல்லற நெறி.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446

இல்லற நெறி


38

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு:

நலன். நலனே விளக.

இதுகாறும் எழுதிய மூன்று கடிதங்களில் பெண்களிடம் காணப்பெறும் பால் பொருத்தமின்மைகளையும் அவற்றை நீக்கும் முறைகளையும் ஒரளவு விளக்கினேன். இத்தகைய நிலைமைகள் ஆண்களிடிம் காணப்பெறவில்லையா என்று வினவியிருந்தாய். கூறுவேன்; பாலுந்தவிலும் பால் திறனிலும் ஆண்களிடம் விரிந்த நிலையில் வேறுபாடுகள் காணப்பெறுகின்றன. சில ஆடவர்கள் தீவிரமான பால் தேவைகளைப் பெற்றுள்ளனர்; அவர்கள் அடிக்கடி கலவியில் விருப்பமுங் கொள்ளுகின்றனர். வேறு சிலரிடம் பால்விருப் பமே காணப்பெறுவதில்லை. இவர்கட்கிடைப்பட்டவர் களிடம் பல்வேறு அளவு நிலைமைகளைக் காணலாம். கின்லே என்ற அறிஞரின் கருத்துப்படி முப்பது வயதிற்குக் கீழுள்ள வர்கள் இணைவிழைச்சு மூலமோ வேறு முறையிலோ ஒரு வாரத்தில் சராசரி 818 தடவைகள் விந்துப் பாய்மத்தை வெளிப்படுத்துகின்றனர். இதே வயதுள்ள ஒரு சிலர் ஒரு வாரத்தில் ஒருதடவைக்குக் குறைந்தே விந்துவினை வெளி யேற்றுவதையும் காணலாம் என்று அவர் காட்டுகின்ருர், மற்றும் சிலர் ஒரு வாரத்தில் ஏழு அல்லது அதற்கு மேற் பட்ட தடவைகளில் விந்துவினை வெளியேற்றுகின்றனர் என்றும் அவர் கூறுகின்ருர். இந்த அளவு எண்கள் வயது, திருமண நிலை, சமூக நிலை, கல்வி நிலை, உடல் நிலை முதலிய வற்றிற்கேற்ப மாறு படுகின்றன என்பதையும் அவர் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்.

ஆண்களின் பால்விருப்பமின்மை: பெண்களிடம் பால் விருப்பமின்மை பொதுவாக அதிகமாகக் காணப்பெறினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/452&oldid=1285295" இலிருந்து மீள்விக்கப்பட்டது