பக்கம்:இல்லற நெறி.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் id?

ஆண்களிடமும் இப்பண்பு தலைக்காட்டாமல் இல்லை. பல பெண்கள் தங்கள் கணவன்மாரிடம் பால் உணர்ச்சியற்ற தன்மையும் காம இச்சையின்மையும் இருப்பதைக் காட்டி யுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். சில பெண் கள் தம்மிடம் அவர்கள் அன்பற்று இருப்பதாகக் குறை கூறுவதுடன் அவர்கள் தம்மீது நம்பிக்கையின்றி இருப்ப தாகவும் ஐயுறுவர். இவ்வாறு ஒரு சிலரிடம் ஒரு குறிப் பிட்ட துணைவியைப் பொறுத்துக் காணப்பெறும் உடல் விருப்பமின்மை காரணமாகப் பால்விருப்பமின்மை அமை யினும், பெரும்பாலோரிடம் அஃது இயல்பாக அமைந்து கிடக்கும் குறைந்த அளவு பாலுந்தலின் காரணமாகவே ஏற்படுகின்றது. வேறு ஒருத்தியை மனைவியாக அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் அவளிடமும் இதே நிலையில்தான் அவர்கள் இருப்பர் என்பதற்கு ஐயம் ஒன்றுமில்லை.

ஆண்மைக் குறைவு: ஓர் ஆடவன் பால்விருப்பமின்மை யுடனிருப்பின், அவனிடம் ஆண்மைக் குறைவும் இருக்கும் என்ற நியதி இல்லை. பால்விருப்பமில்லா ஆடவன் கலவி யின் பொழுது வீரியமுள்ளவனாக இருக்கலாம்; கலவியையும் மிகத் திறமையாகப் புரியலாம். அவனிடம் பால்விடாய் இல்லாததால் அவன் பல வாரங்கள் அல்லது பல மாதங்கள் பால் மகிழ்ச்சியின்றியே காலந்தள்ளலாம். ஆண்மைக் குறைவுள்ள ஆடவனிடம் தீவிரமான ஆர்வம் இருக்கும். அஃது அடிக்கடியும் நேரிடலாம். ஆனால், அவளுல் தேவை யான அளவு உறுதியான விறைத்தலை அடைய முடியாது; அல்லது பென் குறியில் நுழைக்கும் காலஅளவு வரை அவ்வி றைத்தலை நிலைநிறுத்தவும் முடியாது. எனவே, ஓர் ஆடவ

49. பால் உணர்ச்சியற்ற தன்மை-Sexual apathy 50. ஆண்மைக் குறைவு-Impoteney 51. unróð Gjø5titudolásurr–Sexullyf rigid 58. Ljrráð ta& þ& S—Sexual gratifcation

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/453&oldid=598543" இலிருந்து மீள்விக்கப்பட்டது