பக்கம்:இல்லற நெறி.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450

இல்லற நெறி


கட்கியாைது, ஆண்களிடமுள்ள இக்குறையும்பால்பொருத்த மின்மைக்கும் திருமண இணக்கமின்மைக்கும் ஒரு முக்கிய காரணமாகின்றது என்பதை நீ நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.

பால் விருப்பமின்மைக்குக் காரணங்கள்: இனி, பொது வாக ஆடவர்களிடம் பால் விருப்பமின்மையும் ஆண்மைக் குறைவும் நேரிடுவதற்குரிய காரணங்களையும் அக்குறையை போக்கும் முறைகளையும் ஆராய்வேன். இக்காரணங்களை ஒவ்வொருவரிடமும் மருத்துவர்தான்கண்ட றிதல்வேண்டும்: இக்குறை உடற்கோளாறுபற்றியதா அல்லது உளக் கோளாறுபற்றியதா என்பதை அவர்தான் அறுதியிடுதல் வேண்டும். அஃதாவது ஒரு குறிப்பிட்ட ஆடவனிடம் இயல்பாகவே பாலுந்தல் தாழ்ந்தநிலையிலுள்ளதா, அல்லது பால் முதிர்ச்சியின்மை, அநுபவமின்மை, அச்சம் அல்லது வேறு காரணங்களால் பாலுந்தல் உறங்கிய நிலையில் உள் ளதா என்பதை அவர் உறுதிப்படுத்துதல் வேண்டும். இக் காரணங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டுமாயின், விறைத்தலின் பொறிநுட்பத்தை நன்கு அறிந்துகொள் ளல்வேண்டும். இச்செய வில் எந்தெந்த உறுப்புகள் பங்கு பெறுகின்றன என்பதை அறிந்துகொண்டால் உடல்பற்றிய ஆண்மைக்குரிய காரணங்களை அறிதல் எளிது.

விறைத்தல் நிகழ்வதற்கு முதலில் பாலுந்தல் இருக்க வேண்டுவது இன்றியமையாதது. புணர்தலில் விருப்பம் இல்லையாயின் விறைத்தல் நிகழாது. உடல் நலத்துடனிருப் பவர்களிடம் காதலுக்கம் முற்றிலும் இல்லாதிருத்தலைக் காணல் முடியாது. அத்துரண்டல் சிறிது காலத்திற்கோ அல்லது சற்று நீண்ட காலத்திற்கோ வன்மையற்றிருக்க லாம்: பெரும்பாலும் அளவுக்கு மீறிய உடல் உழைப்போ அல்லது மன உழைப்போ அந்நிலைக்குக் காரணமாக அமைய லாம்; பிறப்புறுப்புகளுடன் தொடர்பு கொள்ளாத நோய்

55. Gum/s) gilt-uth—Mechanism

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/456&oldid=1285297" இலிருந்து மீள்விக்கப்பட்டது