பக்கம்:இல்லற நெறி.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் 455

(எ-டு. விரைகளின் நீக்கம். போரில் ஏற்படும் காயம்' வெள்ளை நோய், இருமல் நோய், மதுபானம் முதலியவை) ஆண்மைக் குறைவுநேரிடலாம். விரைகளின்றியும் சில ஆண் குழந்தைகள் பிறக்கின்றன என்றும் மருத்துவ இலக்கியத் தால் அறிகின்ருேம். -

மூளையி ஆம் நடுநரம்பிலும் உள்ள விறைத்தல், மையங்களுள் இணைக்கும் நரம்புகளும் நோய்களால் பாதிக் கப்பெறும் பொழுது உண்டாகும் ஆண்மைக் குறை மற். ருெருவித ஆன்மைக் குறை பாகும். மூளையில் ஏற்படும் பக்கவாதமும் நடுநரம்பில் ஏற்படும் உடல் உருக்கி நோயும் மேக நோயின் பின் விளைவுகளாகும். இந்த இரண்டு நோய்களும் தோன்றுங் கால் அதிக அளவு ஆண் மையை விளைவித்து, பின்னர் ஆண்மையே இல்லாது செய்து விடும் (இந்நோய்களையும் சிகிச்சை மூலம் குணப்படுத்திவிட. லாம்). நரம்பு மண்டலம் முழுவதும் நோயினுல் பாதிக்கப் பெறுங்கால் இணைக்கும் நரம்புகளும் பாதிக்கப் பெறும், சாராயம் போாபத்தினை விளைவிக்கின்றது: மார்ஃபைன், கொகைன், நிகோடைன் போன்ற நஞ்சுகளும் ஆண்மைக் குறைவினை விளைவிக்கும். நிகோடைனைப்பற்றி ஒரு ஃபிரெஞ்சு நாட்டுப் புதின ஆசிரியர் மிக அழகாகக் கூறி யுள்ளார். புகையிலேயும் பெண்களும் பகைவர்கள்; ஒன்றன் சுவை பிறிதொன்றன் சுவையைக் கெடுத்துவிடும்' என்பது அவர் கூற்று; அதிகமாகச் சிறு சுருட்டு பிடிப்பவர் களிடம் ஆண்மைக் குறைவு காணப் பெறுகின்றதென்றும், அப்பழக்கத்தை முற்றிலும் கைவிட்டால் ஆண்மை மீண்டும் நிறைவு பெறுகின்றது என்றும் மருத்துவ நிபுணர்கள் கண்

60. பக்கவாதம்-Paralysis. 61. உடல் உருக்கி நோய்-Tabes. 62. மேக நோய்-Sஆphilis. 63. 1965-63%rtajadit-After-effects. 6 4. &frpFrruü -A1coho1. 65. â Ty &q5t:@-Cigarette.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/461&oldid=598561" இலிருந்து மீள்விக்கப்பட்டது