பக்கம்:இல்லற நெறி.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458

இல்லற நெறி


நிறுத்திவிடுதல் வேண்டும். விந்து வெளியேறும் நிலையில் ஆழ்ந்த சுவாசத்தை மேற்கொள்ளலும் பிறப்புறுப்புத் தசை களே நனவு நிலையில் தளர்வுறச் செய்தலும் பெருந்துணை புரிதல் கூடும். இவ்வாறு மாறி மாறி மேற்கொள்ளப்பெறும் இடைவேளை ஓய்வால் படிப்படியாக விறைத்தலை நீண்டி நேரம் நிலைநிறுத்துவதும் பால் கட்டுப்பாட்டின்1 ஆற்றலை வன்மையுடையதாகச் செய்வதும் இயலுகின்றது. எனினும் இந்த முதல் நிலை முயற்சிகளில் மனைவி கணவனுடன் முற்றி லும் ஒத்துழைத்தல் வேண்டும். இங்ானம் ஒத்துணர்ச்சி யுடன் கூடிய மனப்பான்மையும் துணை புரிதலும் கணவனுக் குத் தேவையான உற்சாகத்தை அளித்தல் கூடும். நாளம்ை வில் இக்குறையும் படிப்படியாக நீங்கும்:

பிழைபாடான உணவு முறைகளின் கேடு: இறுதி பாக ஒன்றை வலியுறுத்த விரும்புகின்றேன். அதுதான் பிழை பாடான உணவு முறைகளால் நேரிடும் கேடு ஆகும். இன்று நாகரிக மனிதனின் உணவில் அதிகமான புரதச் சத்துள்ள பொருள்களும் குறைவான விடிடமின்களும் உள்ளன என் பதை நீ நன்கு அறிவாய். புரதத்தை அதிகமாக உட்கொள் வதால் அதிக அளவு அமிலம் உண்டாகி அது குருதியோட் டத்தில் கலந்து உடலெங்கும் பரவி சுரப்பிமண்டலத்தையேகுறிப்பாகப் பால் சுரப்பிகளைப்-பாதிக்கின்றது. கோதுமை, காய்கறிவகைகள், பழவகைகள். வாதுமைப் பருப்பு, மணிலா கொட்டை போன்ற கொட்டை வகைகள் ஆகியவற்றை அதிகமாக உட்கொண்டால் குருதியிலுள்ள அமிலத்தன்மை குறையும். நடுப்பருவ நிலையிலுள்ளவர்கட்கு - நாற் து வயதினைத் தாண்டியவர்கட்கு -பெரும்பாலும் மரக்கறி உணவே மிகவும் ஏற்றது என்பதை நன்கு உணர்வாயாக. விட்டமின்-Eஆண்மையை அதிகரிக்கச் செய்கின்றது என்று

70. Goo Goiân-Interval 71. Rumâ) & to Glouaró–Sexual control 72. L1r.ğıh-Protein 73. uorá só a-swej–Vegetarian diet

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/464&oldid=1285301" இலிருந்து மீள்விக்கப்பட்டது