பக்கம்:இல்லற நெறி.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460

இல்லற நெறி


39

அன்பார்த்த செந்தில்வேலனுக்கு,

நலன். நலனே விழைகின்றேன்.

இதுகாறும் எழுதிய நான்கு கடிதங்களில் பல்வேறுபால் பொருத்தக் கேடுகளையும் அவற்றைப் போக்கும் முறைகளே யும் ஒரளவு விளக்கினேன். இவற்றைத் தவிர வேறு சில இயல்புகளும் இயற்கைக் கோளாறுகளும் பால் பொருத்தக் கேடுகளை விளைவிக்கின்றன. அவற்றை இக் கடிதத்தில் விளக்குவேன்.

பாலுறுப்புகள் ஒவ்வாமை: பிறப்புறுப்புகள் ஒவ்வா. நிலை மையும் பால்பொருத்தக் கேடுகளை விளைவிப்பதாக மருத் துவ நிபுணர்கள் கருதுகின்றனர். ஆல்ை இந்நிலையைக் காண்டது மிகவும் அரிது. புறனடையாக ஒருசிலரிடம் இணை விழைச்சின்பொழுது பாலுறுப்புகளின் ஒவ்வாமை, சங்கடங் களை அல்லது பால் பொருத்தக் கேடுகளை உண்டாக்கலாம். புணர்ச்சியின்பொழுது ஒரு பெண் விறைத்த நிலையிலும் பயந்த இயல்புடனும் இருந்தால் சற்றுப் பெரிய ஆண் குறியையுடைய ஆடவன் புணருவகால் அவளுக்கு அசெளகர் யமும் வலியும் உண்டாகலாம்: ஆல்ை இத்தகைய நிலை ஏற் படுவது மிகவும் அரிது. அங்ங்ணமே, சிறிய அளவுள்ள ஆண் குறியும் மிகக் கடுமையான பால் இணக்கமின்மையை goã;ir வித்தல் அரிதாகும். ஒரு சில ஆடவர்கள் ஆண்குறி மிகப் பெரிதாக உள்ளதென்றும், மற்றும் சிலர் ஆண்குறி மிகச்சிறி தாத உள்ளதென்றும் கற்பனையாகக் கவலேகொண்டு துன்பப் படுகின்றனர். இந்த அளவில்தான் ஆண்குறி இருத்தல் வேண்டும் என்ற நியதி இயற்கையில் அமையவில்லை.

74. gpdiairrgolo–Disproportion

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/466&oldid=1285302" இலிருந்து மீள்விக்கப்பட்டது