பக்கம்:இல்லற நெறி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணப்பொருத்தம் 41

அஃது அவளுடைய உடல்நிலையைப் பாதிக்கலாம்; சிலசமயம் அவளுடைய உயிரே போயினும் போகலாம். எனவே, இத் தகைய நிலையினையுடைய பெண்ணைக் கொண்டுள்ள பெற்ருேர்கள் திருமணத்திற்கு முன்னர் நிலையினை எடுத்துக் காட்டிவிட வேண்டும்; இந்நிலையை மணமகன் ஒப்புக் கொண்டாக வேண்டும். இதல்ை திருமணத்திற்குப் பிறகு தம்பதிகளிடம் உடல் உள்ளக் கிளர்ச்சிப் பொருத்தப் பாடுகள் சரியான முறையில் அமைய ஏதுவுண்டு.

குழந்தைப்பேறு ஏற்படாத நிலையிலுள்ளவர்கள் அல்லது குழந்தைப்பேறே வேண்டாம் என்று கருதுகின்றவர்கள் திருமணமே புரிந்துகொள்ளக் கூடாதா என்று நீ வினவ லாம். இல்லை, இல்லை; புரிந்துகொள்ளக் கூடாது என்ற கட்டாயம் இல்லை. இந்த நிலையையறிந்து திருமணம் புரிந்து கொண்டவர்களின் மணவாழ்க்கை வெற்றியுடன் திகழ் வதை நான் கண்டிருக்கின்றேன்; கேட்டுமிருக்கின்றேன். குழந்தை பெறமுடியாது என்ற கூறினை விஞ்சக்கூடிய ஏனைய கூறுகள் ஒர் ஆடவனையோ பெண்ணையோ திருமணத் திற்குத் தூண்டக் கூடியனவாகவும் உள்ளன. இத்தகைய சந்தர்ப்பங்களில் தம்பதிகள் தாம் திருமணம் புரிந்துகொள் வதற்கு முன்னர் ஒருவருடைய குறையைப் பிறிதொருவர் நன்குபுரிந்துகொள்ள வேண்டும்; தம்முடைய மனநிலைகளே யும் அதற்கேற்பப் பக்குவப்படுத்திக்கொள்ளவும் வேண்டும். தம்முடைய திருமணம் தாம் எதிர்பார்க்கும் தேவைகளனைத் தையும் தந்து திருப்தி செய்ய முடியாது என்ற நிலையினை முன்னரே அறிந்த நிலையிலும், ஆழ்ந்த தெளிவான காதலால் தூண்டப்பெற்ற ஓர் இளைஞனும் ஒரு பெண்ணும் கட்டாயம் திருமணம் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவதை நாம் பல இடங்களில் காணலாம். இதல்ை தம்முடைய எதிர்கால உறவுபற்றித் தாம் கொண்ட அச்சமும் கவலையும் அடிப்படையற்றவையாக மாறியதை யும் நாம் காணலாம்:

இனமேம்பாட்டிய்ல் பொருத்தம்: பெற்ருேர்கள் ஏதாவது நோயால் பீடிக்கப்பெற்றிருந்தாலும் அவர்கட்குப் பிறக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/47&oldid=598579" இலிருந்து மீள்விக்கப்பட்டது