பக்கம்:இல்லற நெறி.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464

இல்லற நெறி


மணம் ஆனவுடன் தம்முடைய பால் பழக்கங்களைத் திரும்ப வும் சரிவர அமைத்துக்கொண்டு பாலுறவில் முழுமையான திருப்தியை அடைவதில் சங்கடப்படுகின்றனர். அதுவும் பெண்ணிடத்தில் இப்பழக்கம் மிகவும் குறிப்பிடத்தக்க தீய விளைவினை உண்டாக்கி விடுகின்றது. பெரும்பாலும் இப் பழக்கத்தை மேற்கொள்ளும் பெண்கள் யோனிலிங்கத்தைத் தூண்டியே இன்பம் எய்துகின்றனர்; திருமணம் ஆனபின் னர் பாலுறவு கொள்ளும் பொழுது யோனிக் குழலைத் துாண்டுவதால் இவர்கட்கு இன்பம் ஏற்படுவதில்லை. படித்த பெண்களிடமே இக்கொடிய பழக்கம் அதிகமாக நிலவு கின்றது. பெண்களிடம் இப்பழக்கம் நேரிடும் விவரங் காேப்பற்றி அறிஞர் நூல்களைப் படித்து அறிந்துகொள்க.கே. இத்தகைய தீய பழக்கத்தால் ஒரு பெண்ணிடம் ஏற்படும் பால் பொருத்தக் கேட்டினை எளிதில் நிவர்த்தி செய்து கொள்ளலாம். இப்பழக்கத்தைப் போக்க முயல்வதைவிட அதனை வேறு பக்கமாகத் திருப்பி மறக்கச் செய்தும் புதிய பழக்கத்தை உண்டாக்கியும் அதனை மாற்ற முயல்வதே ஒறந்தது. முதலில் கணவன் தன் கையினலேயே யோனி லிங்கத்தை மீட்டித் துணைவியை உச்சநிலை உணர்ச்சியை அடையச் செய்தல் வேண்டும். சில தடவைகள் இங்ங்ணம் செய்த பிறகு கூடியவரை பெண் அறியாமலேயே தன் ஆணுறுப்பையும் பயன்படுத்தவேண்டும்; அதே சமயத்தில் கையைப் பயன்படுத்தி யோனிலிங்கத்தைத் துடிக்கச் செய் வதும் தொடர்ந்து நடைபெறுதல் வேண்டும். இத்தகைய "கூட்டுப் புணர்ச்சியால் பெண் உச்சநிலை உணர்ச்சியை எய்தியதும், நாளடைவில் யோனிக்குழல் து.ாண்டுதலை-இயல் பான இணைவிழைச்சினை-மேற்கொண்டு அவளிடம் உச்ச நிலை உணர்ச்சி ஏற்படச் செய்தல்வேண்டும். பெண் திறமை யுடையவளாகவும், அநுபவம் மிக்கவளாகவும் பெண் எதை யும் எளிதில் புரிந்துகொள்ளும் கூரிய அறிவுடையவளாகவும் இருப்பின் இத்தகைய சிகிச்சை உடனே பலன்தரும்.

84- Guri aufsstætb–Clitoris 85, Illustrated Encylopaedia of Sex chap-57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/470&oldid=1285304" இலிருந்து மீள்விக்கப்பட்டது