பக்கம்:இல்லற நெறி.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466

இல்லற நெறி


பெரும்பாலோரிடம் இப் பழக்கம் அடியோடு மறைந்தே போகின்றது. ஒருவருடைய தோற்றத்திலிருந்து அவரிடம் இப் பழக்கம் உள்ளது என்று கண்டறிந்து கொள்ளவும் இயலாது.

ஒருபால்-புணர்ச்சிப் போக்கினையும் எதிர்பால்-புணர்ச் சிப் போக்கினேயும் கொண்டுள்ள ஒருசிலர் திருமணம் புரிந்து கொண்டு சாதாரணமான குடும்ப உறவினை ஏற்படுத்தவிழை கின்றனர். சிலர் தம்முடைய ஒருபால்-புணர்ச்சி விழைவு களின் அளவினை அறியாமலேயே மணம் புரிந்துகொள்ளுகின் றனர்; திருமணம் தம்மிடம் இப்போக்கினை மாற்றிவிடும் என்று கருதியே இவர்கள் திருமணத்தில் இறங்குகின்றனர். எனினும், இவ்வாறு வேறுபட்டுச் செல்லும் போக்குகள் திருப்தியான திருமணப் பொருத்தத்தினை உண்டாக்குதல் அரிது. எனவே, ஒருபால்-வேட்கையினையுடையவர்கள் திரு மணத்தில் இறங்கவேகூடாது; திருமணம் இப்போக்கின நீக் கும் என்று கருதுவது அறிவுடைமையுமன்று. இது திருமணம் பைத்தியத்தைப் போக்கிவிடும் என்று கருதுவதனே டொக்கும்.

திருமண வாழ்க்கையில் இறங்கப் போகின்றவர்கள் அனைவரும் இந்த ஐந்து கடிதங்களிலும் கூறப்பெற்றுள்ள பல் வேறு பிரச்சினைகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று கருதியே அவற்றைக் கூறினேன். அடுத்து எழுதும் கடிதங் களில் திருமணத்தின் உடல்நலக்கூறில் உன் கவனத்தைத் திருப்புவேன்;

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/472&oldid=1285305" இலிருந்து மீள்விக்கப்பட்டது