பக்கம்:இல்லற நெறி.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468

இல்லற நெறி


4.0

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு,

நலன். நலனே விழைகின்றேன்.

நோயற்ற வாழ்வு: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல் வம்' என்பது ஆன்ருேர் அருளிய வாக்கு. திருமணம் புரிந்து கொண்டு இல் வாழ்க்கையில் புகும் மண்மக்கள் உடல்நலத் துடன் திகழவேண்டும். பாலுறவு கொள்ளுவதிலும் பிறவற் றிலும் அவர்கள் அளவுடன் இருத்தல்வேண்டும்; ஒரு முறை யுடன் நடந்துகொள்ளவேண்டும். இன்றைய நாகரிக வாழ்க் கையில் பலர் வழி விலகிச் சென்று பல இன்னல்களை எய்த ஏதுவுண்டு. ஆகவே, இக்கடிதத்திலும் இதனைத்தொடர்ந்து எழுதும் ஒரு சில கடிதங்களிலும் தம்பதிகள் உடல் நலத் துடன் வாழ்ந்து இல்லற வாழ்க்கையின் இன் பப் பேறுகளை அடைவதற்கான ஒரு சில செய்திகளை விளக்குவேன்.

திருமண வயது: தக்க வயது வந்தவுடன் தான் நம்பிய ரும் நங்கையரும் திருமணம் புரிந்துகொள்ளவேண்டும்; .பிஞ்சில் பழுக்கக்கூடாது. பொம்மைக் கல்னயா முறை’ போன்ற வழக்கமே தலைக்காம் டலாகாது. முன்னுெரு கடிதத் தில் தொல்காப்பியர் வரையறை செய்துள்ள பத்துவகைப் பொருத்தங்களைக் குறிப்பிட்டேன் அல்லவா? அதில் வயதுக என்ற கூறினை வற்புறுத்த விரும்புகின்றேன். இதுபற்றியும் ஆண்டுக் குறுப்பிட்டுள்ளேன். பெரும்பாலும் பால் சுரப்பி கள் பதினைந்து வயதிற்கு மேற்பட்டே சரியான முறையில் செயற்படும். ஆனால், இந்தவயதிற்குச் சற்று முன்னதாகவே அவர்களிடம் பால் முதிர்ச்சி ஏற்படினும், ஒரு சில ஆண்டு கள் கழிந்த பிறகே அவர்கள் பாலுறவு கொள்ளவேண்டும். பண்டைத் தமிழ் அகப்பொருள் இலக்கணத்தில் தலைமகன் பதினைந்து யாண்டு பத்துத் திங்களும், தலைமகள் பதினெரு யாண்டு பத்துத் திங்களும் நிரம்பப்பெற்றவர்களாக இருந்து T2. ureò sig útstsch-Sex glands -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/474&oldid=1285306" இலிருந்து மீள்விக்கப்பட்டது