பக்கம்:இல்லற நெறி.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடல் நலம் 46.9

இரண்டு திங்கள் களவில் ஒழுகி அதன் பின்னர் மணந்து கொண்டு கற்பில் ஒழுகுவர் என்று கூறப்பெற்றுள்ளதை ஈண்டு நினைவு கூர்க. இங்ங்னம் அவர்கள் கருதி பது குறிக் கோள் நிலையினதேயன்றி, நடைமுறையிலிருந்த ைதயன்று. 'இவ்வாற்ருனும் இஃது உலகத்து இயல்பன்று என்பதுபெற் ரும், உலகத்து ஒழுக்கத்திற்குக் காலவரையறை இன்மை யான் என்பது இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த விடத்துப் பிராயமும் ஈங்கே உரைக்கப்பட்டதாம். பதினுேராண்டும் பத்துத் திங்களும் புக்க தலைமகளோடும் பதினையாண்டும் பத் துத் திங்களும் புக்க தலைமகனைப் போலும் புணர்தல் வேண் டிற்று என்பது பெற்ரும், அவளும் இரு திங்கள் களவொழுக் கொழுகப் பன்னீராட்டைப் பிராயத்தாளாம். அது மக்கட் பேற்றுக்குக் காலம்; களவொழுக்கத்திற்குப் பொருந்தா தென விலக்கப் பெற்றதாம் ஆசிரியர்களான் என்பது. இவ னும், இரு திங்கள் களவொழுக்கொழுகப் பதினுராட்டைப் பிராயத்தானம். அஃது ஆண்மை நிலைபெறும் காலமாக லான், களவொழுக்கிற்கு விலக்கப்பட்டது என்பது” என்ற இறையனுர் களவியலுரைப் பகுதி ஈண்டு சிந்திக்கற் பாலது. எனவே, தலைமக்களிடையே களவில் நிகழ்ந்த புணர்ச்சி உள்ளுறு புணர்ச்சியேயன்றி, மெய்யுறு புணர்ச்சி யன்று என்பதும் இதல்ை உறுதிப்படுகின்றது: இதுபற்றிய தடைவிடைகளை நக்கீரரின் உரை கண்டு அறிக.சி

இன்றைய அறிவியல் கருத்துப்படி உள்ளக்கிளர்ச்சி முதிர்ச்சியும் சமூக முதிர்ச்சியும் ஏற்பட்ட பிறகே திருமணத்தில் இறங்கவேண்டும். உயிரியல் அடிப்படையில் இளந்தம்பதிகள் (சுமார் 12 வயதிற்கு மேற்பட்டுப் பெண்களும், சுமாா 15 வயதிற்கு மேற்பட்டு ஆண்களும், இணைவிழைச்சிற்கும் இனப்பெருக்கத்) ற்கும் தயாராகி விட்டனர்போலக் காணப்பெறினும், அ. ரிகளிடம் உள்ளக் கிளர்ச்சி முதிர்ச்சியும் சமூக முதிர்ச்சியும் தக்க முறையில் ஏற்பட்டிருக்கா. தாய் தந்தையராதற்குரிய பொறுப்பு

3. இறையனர் களவியல்-நூற்பா 3.2-இன் உரை 弟。 # * நூற்பா 2-இன் உரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/475&oldid=598591" இலிருந்து மீள்விக்கப்பட்டது