பக்கம்:இல்லற நெறி.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடல்நலம் 4፵፬

வேற்றுதல் முடியும் இதனுல் தாயின் உடல்நலமும் கெடா திருக்கும்.

தாம்பத்திய உறவு ஏற்பட்ட ஒரு சில மாதங்களிலேயே பல பெண்கள் கருவுறுகின்றனர். சிலர் திருமணம் ஆன வுடன் வீட்டுக்கு விலக்காகும் வாய்ப்பினையே பெறுவ தில்லை; முதல் மாதத்திலேயே கருவுறுகின்றனர்! பெரும்பா லும் திருமணம் ஆனவுடனேயே மணமக்களின் பெற்ருேர்கள் பேரன் பேத்தியைத் தம் கைகளினுல் தூக்கிப் பார்க்கவேண் டும் என்ற அலாவுடன் உள்ளனர்; அந்நாளை ஆர்வத்துடன் எதிர்நோக்கியே இருக்கின்றனர். இந்நி லயில் மேல்நாடுகள் போல் கருத்தடைமுறைகளை கையாண்டு பிள்ளைப்பேற்றினை ஒத்திப் போடுதல் இயலாத செயலாகும். அதிகம் கல்வி யறிவு ஏற்படாத தம்பதிகளிடம் இது நடைபெறுவது முயற் கொம்பாகும். நன்கு படித்த மணமக்கள் பெரும்பாலும் தக்க வயது வந்தபிறகே திருமணம் புரிந்துகொள்ளுகின் ருர்க ளாதலின், அவர்கள் கருத்தடை முறையைக் கையாளவேண் டிய அவசியமே இல்லை. அப்படி ஒன்றிரண்டு ஆண்டுகள் தமக்குப் பிள்ளைப்பேறு ஏற்படாதிருந்தால் தம்முடைய பாலுறவுக்கு நலமாக இருக்கும் என்று அவர்கள் கருதினல்" கருத்தடை முறைகளைக் கையாளுவது அவர்கட்குச் சிரமமு மன்று. படித்தவர்களாதலின் அம்முறைகளை அவர்கள் எளிதில் மேற்கொள்ளலாம்.

கருத்தடையும் பால்பொருத்தமும்: கருத்தடை முறைகளை மேற்கொள்ளுவதிலும் தம்பதிகள் விழிப்பாக இருத்தல்வேன் டும். சில முறைகளில்ை இருவருக்கும் பால்பொருத்தப்பாடு ஏற்பட்டு கலவியில் ஒருவித திருப்தியும் ஏற்படலாம்; சில முறைகளினல் அவ்வித வாய்ப்பு நேரிடாமலும் போகலாம். எடுத்துக்காட்டாக, பெரும்பாலான பெண்கள் கணவன் :இடையீட்டு இணைவிழைச்சு' முறையைக் கையாளுவதனல் உச்சநிலை உணர்ச்சியை அடைய முடிவதில்லை. இங்குக் கண வன் தக்க முறையைத் தேர்ந்தெடுத்துத் திருப்தியான பாலு றவினை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும். அங்கனமே, பெண்கள் உறைகளை அணிவதல்ை ஆண்கள் அதனைத் தமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/481&oldid=598606" இலிருந்து மீள்விக்கப்பட்டது