பக்கம்:இல்லற நெறி.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடல் நலம் 479

4.1

அன்பார்ந்த செந்தில் வேலனுக்கு, நலன், நலன் தெரிவிக்க. இணைவிழைச்சு: திருமண வாழ்க்கையில் மிகவும் இன் பத்தைத் தரும் பகுதி இணைவிழைச்சு ஆகும். ஆணும் பெண்ணும் தக்க முதிர்ச்சியடைந்ததும் அவர்களிடம் ஒன்று சேர்வதற்கான காமம் அரும்புகின்றது. அஃது இருபா லாரையும் ஒன்று சேர்த்து, வாழ்க்கையின்பத்தைத் தந்து, உலகை இடையருது நடைபெறச் செய்யும் அற்புத ஆற்ற லாக இலங்குகின்றது. காமம்’ என்ற சொல்லை வள்ளு வரும் தொல்காப்பியரும் பல இடங்களில் உரிய பொருள் களில் ஆண்டுள்ளனர். இன்பக் கருன இணைவிழைச்சு ஆண்-பெண் என்ற இருபாலின்கண் நிகழும் என்ற கருத்தை ஆசிரியர் தொல்காப்பியனர்,

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வருஉம் மேவற் ருகும்' என்ற நூற்பாலில் எடுத்தோதியுள்ளார். இன்பம் என்பது மக்களிடத்தேயன்றி விலங்கு பறவை முதலிய எல்லா உயிர் களிடத்தேயும் பொருந்தி நிகழுமாதலின், அதனைச் சிறப்பித் துள்ளார். இங்ங்ணம் இன்பம் எல்லா உயிர்க்கும் பொது வாக நிற்றலின்,

..இன்பமும் பொருளும் அறனும் என்ருங்கு அன்பொடு புணர்ந்த ஐந்தினே மருங்கின் 12 என்ற நூற்பாப் பகுதியிலும் இன்பக் கூற்றினை முதலில் எடுத்தோதியுள்ளார் என்பதை அறிதல் வேண்டும். பல வகை உயிர்கட்கும் வரும் இன்பம் இருவகைப்படும். அவை யாவன, போகம் நுகர்தலும் வீடு பெறுதலும் என.

தொல்-பொருளியல்-நூற்-27 (இளம்) 12: , களவியல்-நூற். (இளம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/485&oldid=598614" இலிருந்து மீள்விக்கப்பட்டது