பக்கம்:இல்லற நெறி.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480

இல்லற நெறி


அவற்றுள் வீடுபேறு துறவறத்தில் நின்ருர்க் கல்லது எய்தல் அரிதாயிற்று. போக நுகர்தல் மனையறத்தார்க் கெய்வது” என்ற இளம்பூரணரின் உரைப்பகுதியால் போகம் நுகர் தலில் இணை விழைச்சும்’ ஒரு பகுதியாம் என்பது பெறப் படுகின்றது. கரு உருவாகும் நிலையை அடைந்ததும் தாகை எழும் உணர்ச்சியாகிய காமத்தால் தூண்டப்பெற்ற ஆணும் பெண்ணும் ஒன்று கூடி இணைவிழைச்சு புரிகின்றனர். இந்தப் புணர்ச்சி உலகுயிர் தோற்றத்திற்கும் வாழ்க்கை நலத்திற் கும் இன்றியமையாக் காரணமாக இருத்தலானும், அப் புணர்ச்சி நிகழும் அகவொழுக்கம் இன்றியமையாப் பொருள்களில் ஒன்ருக இருத்தலானும் அதனைப் பண்டைப் பெரியோர் அகப்பொருள் எனச் சிறப்பித்து அதனைப் பல வாறு விரித்தும், இலக்கணவரையறை செய்தும், இலக்கியத் தில் பொதிந்தும் பொன்னேபோற் போற்றினர். அந்த அகப்பொருளின் அருமை பெருமையை இன்றைய மணமக் கள் நன்குணர்ந்து, அதன் தகுதியறிந்து, நுகர்ந்து, இன் புற்று, இனிது வாழ்தல் வேண்டும். இது கருதியே அறி வியல் அடிப்படையில் இணைவிழைச்சினை எங்ங்ணம் மன மக்கள் வரையறை செய்து கொள்ள வேண்டும் என்பதை இக்கடிதத்தில் உனக்கு உணர்த்த விரும்புகின்றேன்.

கலவி புரிதலில் கணக்கு: எத்தனை நாளுக்கொரு முறை கலவி புரியலாம் என்பது பற்றி ஆராய்ச்சி நினைப்பிற்கெட் டாத நெடுங்காலத்திலிருந்தே நடைபெற்று வந்துள்ளது. திங்களுக்கு இரண்டு முறை மனைவியுடன் சேருமாறு நமது நாட்டு நூல்கள் கூறுகின்றன; அதாவது மாதப் பூப்புக்கு முன்ளுெரு நாளும் சூதகம் நின்ற பின்னொரு நாளும் என்று சிலர் கூறுப. கருத்தரிக்கும் நாட்களில் இரண்டொரு நாம் கள் கலவி புரிந்து மற்றநாட்களில் அதனை விலக்கி வாழ்தல் அறிவுடைமை. மாதத்துக்கு இரண்டு முறை மங்கை யரைப் புணர்தல்’ என்ற அநுபவமொழியை நோக்குக. கொரான் என்ற இஸ்லாமிய வேதாகமத்தில் வாரத் திற் கொரு முறை லவி புரிதல் வேண்டும் என்று முகமது விதி செய்துள்ளார், இஸ்ல மியர் ஒன்றுக்கு மேற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/486&oldid=1285312" இலிருந்து மீள்விக்கப்பட்டது