பக்கம்:இல்லற நெறி.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482

இல்லற நெறி


பெண்களை ஆய்ந்ததில் வாரத்திற்கு இரண்டிலிருந்து மூன்று தடவைகள் வீதம் உறவு கொண்டதாகத் தெரிய வந்தது. இந்த ஆராய்ச்சிகளில் கண்டுள்ள தம்பதிகள் பாவ ரும் திருமணம் ஆகிச் சில காலம் கழித்தவர்கள் திருமணம் ஆனவுடன் ஆராய்ந்தால் இந்த அதிர்வு-எண் இன்னும் அதி கம் இருக்கும்; நாடோறும் ஒரு தடவையாவது இருக்கும்.

அமெரிக்க ஆடவர்களை ஆய்ந்த கின்லே' என்பார், இந்த அதிர்வு எண் பெரும்பாலும் கணவனின் வயதைப் பொறுத்து மாறுகின்றது என்று காட்டியுள்ளார். திருமணம் ஆன இருபத்தொன்றிலிருந்து இருபத்தைந்து வயதுக்குட் பட்டவர்கள் வாரத்திற்குசராசரி மூன்று தடவைக்குச்சற்று அதிகமாகவும், முப்பத்தொன்றிலிருந்து முப்பத்தைந்து வய துக்குட்பட்டவர்கள் வாரத்திற்குச்சராசரிஇரண்டுதடவைக் குச் சற்று அதிகமாகவும் மேற்கொள்ளுவதாகவும் கூறியுள் ளார். இந்த எண்ணும் நாற் பதிலிருந்து நாற்பத்தைந்து வயதுக்குட்பட்டவர்களிடம் வாரத்திற்குச் சராசரி ஒன்றரைதடவைகள் வீதமும், ஐம்பத்தாறு வயதிற்கு மேற் பட்டவர்களிடம் வாரத்திற்குச் சராசரி ஒரு தடவைக்குக் குறைந்தும் இருக்கின்றது. எனினும், ஒவ்வொரு வயதுக் குழுவிலுள்ளோரிடமும் வீச்சில்' அதிக வேறுபாடும் காணப்பெறுகின்றன.

மேற்கண்ட ஆராய்ச்சிகளிலிருந்து வாரத்திற்கு இத்தனை தடவைதான் கலவி புரிதல் வேண்டும் என்ற பிடிவாதக் கொள்கையை வற்புறுத்த முடியாதென்று ஒரளவு அறி கின்ருேமல்லவா? தனிப்பட்டோரின் பால்திறன், பால்விருப் பம், அடிக்கடி மாறுபடக்கூடிய பல்வேறு நிலைகள், சூழ்நிலை கள் போன்ற பல்வேறு கூறுகள் கலவியின் அதிர்வு எண்ணை அறுதியிடுகின்றன. உடல்நலக் குறைவு, குறைவான உணவு, அளவுக்கு மீறிய வேலை, உள்ளக்கிளர்ச்சிச் சோர்வு

I 7. SDSS Gom)—Kinsey

18, offé &–Range

19 பிடிவாதக் கொள்கை-Dogmatish

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/488&oldid=1285313" இலிருந்து மீள்விக்கப்பட்டது