பக்கம்:இல்லற நெறி.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடல்நலம் 483

முதலியவை பால் தூண்டலக் குறைத்துவிடும்; ஒய்வு. ஊட்ட உணவு, காமத்தை எழுப்பும் தூண்டல்கள், இன் னும் இவை போன்ற கூறுகள் பால் தூண்டலை மிகவும் அதி கரிக்கச்செய்யும். அதிலும் அன்ருடம்வெளியாகும் சிறுகதை கள் தொடர்கதைகளைப் படிப்பதாலும், படக்காட்சிகளை அடிக்கடிப் பார்ப்பதாலும், நாடகம் நாட்டியம் போன்ற கேளிக்கைகளில் அதிகம் ஈடுபடுவதாலும் மக்களிடையே இணைவிழைச்சு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வரு கின்றது என்பதைக் கூற வேண்டியதில்லை.

தனிப்பட்டோரிடம் இயல்பாக எழும் விருப்பம், அவரு டைய பால்திறன் ஆகிய கூறுகள் பாலுறவினைக் கட்டுப் படுத்தவே சிறந்த விதியாகும். கலவி புரிந்தவுடன் ஒருவரி டம் ஏற்படும் உடற்சோர்வினை இதனை அறுதியிடும் அளவாக கொள்ளலாம். புணர்ச்சி முடிவுற்றதும் அல்லது அதற்கு மறுநாளும் ஒருவரிடம் அதிகச் சோர்வு காணப்பெற்ருல், அவர் கலவி செயல்களே குறைத்துக் கொள்ளல் வேண்டும். எனினும், கலவிச் செயலுக்குப் பின்னர் ஒருவிதத் தளர்ச்சி யும் திருப்தியும் இருக்குமாயின், அது பாலுறவுகள் அவரிடம் அதிகப்படவில்லை என்பதற்கு அறிகுறியாகும். எனவே, தம்பதிகள் அளவுக்கு மீறினுல் அமிழ்தமும் நஞ்சு என்ற பழமொழியை நினைவிற்கொண்டு தமது உடல்நிலை, மன நிலைக்கேற்றவாறு கலவியை மேற்கொள்ளலே சாலச் சிறந் தது என்பதை உணர்வாயாக.

கணவன்-மனைவியின் பால் வேட்கை வேற்றுமை: இசைக் கச்சேரியில் தாளமும் சுருதியும் ஒத்துக்கொள்ளாதபொழுது பாடகர் அவற்றை அதுவத்திலெழுந்த இலாவகத்தால் சரிப்படுத்திவிடுகின்ருர்; இசை விருந்தும் இனிதாக அமை கின்றது; அங்ங்னமே, கணவன் மனைவியரிடையே எழும் பால்வேட்கையின் அளவில் வேறுபாடு இருப்பின், கூடிய வரை அவர்கள் தம்முடைய ஒத்துழைப்பால் அதனைச் சமா வித்துக்கொள்ள முயலவேண்டும்; அப்பொழுது இல் வாழ்க்கையாகிய வீணையில் தக்க பொருத்தப்பாடுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/489&oldid=598622" இலிருந்து மீள்விக்கப்பட்டது