பக்கம்:இல்லற நெறி.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484

இல்லற நெறி


அமைந்து சிறப்பாக இயங்கும். திருமணத்தில் பொருத்தப் பாடு ஏற்படுவதற்கு இது மிகவும் இன்றியமையாதது என் பதை ஒவ்வொரு மணமக்களும் உளங்கொள்ளல் வேண்டும். பால்வேட்கையில் இருவரிடையேயும்குறிப்பிடத்துக்கஅளவு அதிகவேற்றுமையிருப்பின், அதுபால் சங்கடங்கட்கும் பால் இணக்கமின்மைக்கும் இடங்கொடுப்பதாக இருக்கும். இதனை இருவரும் ஒருவருக்கொருவர் பரிவுடனும் ஒருவரையொரு வர் நன்குபுரிந்துகொள்ளும் மனப்பான்மையுடனும் அணுகித் திருப்தியான முறையில் சரிப்படுத்திக் கொள்ளல் வேண்டும். இதற்குப் பல்வேறு நிலைகளைக் கவனித்தல் வேண்டும். கலவி புரிவதில் பொதுவாகஆணேதொடங்கி வைப்பதுடன் செயற் படவும் செய்கின்றன். பெண் உயிரியல் அடிப்படையில் செயற்படா நிலையில் ஆணை ஏற்கவேண்டியவளாகவும் உள் ளாள். நம்முடைய சமூக வாழ்வில் இச் செயற்படாநிலை பயிற்சியாலும், பயிற்றலாலும், மரபு வழியாக வரும் பழக் கத்தாலும் சதா வற்புறுத்தப்பெற்று வருகின்றது. சில சமூகங்களில் தம்பதிகள் இருவரும் தொட ங்கிவைப்பதாலும் செயற்படுவதிலும் சரிசமமாக இருந்தபோதிலும், பெரும் பாலான சமூகங்களில் பாலுறவுகளில் பெண் செயற்படா நிலையையே மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே, சாதா ரணமாகத் திருமணம் ஆன தொடக்கக் காலத்தில் பால் இணக்கத்தில் மனைவி தொடங்கிவைக்கும் செயலை மேற் கொள்வது அரிது; பெரும்பாலான உறவுகள் கணவனது விழைவுகளையொட்டியே நடைபெற்று வருகின்றன. மேலும் இளவயதுடைய மனைவியின் பால்துடிப்புகளும் உறங்கிய நிலையிலிருப்பதால்? முதலில் அவள் தன்னுடைய பால் தேவைகளையும் பால்திறன்களையும் அறிந்துக்கொள்வதிலும் இயலாத நிலையிலிருக்கின்ருள். சிறிது காலம்வரை திருமண உறவுகள் ஒரளவு நன்முறையில் அமைந்த பின்னரே அவ ளுடைய காம இச்சைகளும் கிளர்ந்தெழுந்து வளரத் தொடங்குகின்றன; ஆகவே, அவற்றைப் பாலுறவிற்கு ஒரு

20. 2-pišau sălău-Dormant state

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/490&oldid=1285314" இலிருந்து மீள்விக்கப்பட்டது