பக்கம்:இல்லற நெறி.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486

இல்லற நெறி


ஏற்பட்டிருப்பினும், அவன் பாலுறவில் பங்கு பெறுவது சாத்தியப்படுவதில்லை. ஆகவே. திருமணத்தில் பாலுறவு கொள்வதில் கணவனது பால்திறனே பெரும் பங்கு பெறு கின்றது என்பது நன்கு உளங்கொள்ளத் தக்கது.

எனவே, பாலுறவுகளக் கட்டுப்படுத்தித் தன் மனைவி யின் விருப்பத்திற்கேற் பவும் ஒருநெறிப்படுத்தும் செயல் கணவன் கையில்தான் உள்ளது. அவன் தன்னுடைய விழைவுக்கேற்பப் பாலுறவினை வலுவந்தமாக மேற்கொள் ளாது தன் மனவியின் பால்துலங்களுக்கேற் பவும், தான் அணுகும்போது அவள் புரியும் எதிர்வினைகளுக்கேற்பவும் மட்டுப்படுத்திச் சரிப்படுத்திக்கொண்டு கலவியை மேற் கொள்ளல் வேண்டும். பாலுறவில் இறங்குவதற்கு அவ ளிடம் திட்டமான மறுப்புகளிருப்பின், கணவன் அவளைப் பாலுறவிற்கு வலுக்கட்டாயப்படுத்தலாகாது. பாலுற வினால் அவள் முழு மன நிறைவு கொள்ளக்கூடிய செவ்வியை அறிவதற்கு அவன் முயலவேண்டும்; மேலும் கணவனே பாலுறவினைத் தொடங்கி வைக்கவேண்டும். மனைவியைத் தழுவ வேண்டும் என்ற நியதியையும் மேற்கொள்ள வேண்டு மென்பதில்லை. அடிக்கடி மனைவியும் கணவனே அணுகு வதில் முயற்சியெடுத்து அவனைக் கட்டித் தழுவுதல் இருவருகி கும் இன்னும் அதிக மகிழ்ச்சியை அளிக்கும். எனவே பொதுவாக ஏனைய கூறுகளிலெல்லாம் பொறுத்தப்பாடு களைக் கொண்டுள்ள கணவனும் மனவியும் ஒருவருக் கொருவர் ஆழ்ந்த அன்பினையும் பரிவினையும் கொண்டிருப் பதால் இருவருக்கும்.இணக்கத்தையும் திருப்தியையும் தரும் காலத்தையறிந்து அதில் ப்ாலுறவு கொள்ளுவதில் யாதொரு சங்கடத்தையும் அடையவேண்டியதில்லை. ஆயினும், அவரி கள் ஒருவர் மற்றவருக்குத் தன்னுட்ை உணர்ச்சிகளையும் விழைவுகளையும் வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்வது மிகமிக முக்கியமாகும் என்பதை உணர்வாயாக :

பால் விழைவில் தாள இயக்கம்: ஒரு பெண்ணின் வாழ்க் கையில் மாதந்தோறும் சில நாட்களில் அவளிடம் பாலுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/492&oldid=1285315" இலிருந்து மீள்விக்கப்பட்டது