பக்கம்:இல்லற நெறி.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடல்நலம் 48ሃ

தல் அதிகமாகவும், இல நாட்களில் குறைவாகவும் ஒரு தாள இயக் கம்போல் இருப்பதாக அறிஞர்கள் ஆராய்ந்து கண்டுள் ளனர். ஹேவ்லக் எல்லிஸ், மேரி ஸ்டோப்ஸ், காத்தரின் டேவிஸ் போன்றவர்களும் பிறரும் ஒரு பெண்ணின் மாத விடாய் வட்டத்தில் அவளிடம் ஏற்படும் பால் விருப்பத்தில் ஏற்றமும் இறக்கமும் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். பெரும்பான்மையோரிடம் இதனைக் காணலாம் என்று மருத்துவ நிபுணர்களும் கூறுகின்றனர். மாதவிடாய் தோன்றுவதற்குச் சில நாட்களுக்கு முன்னிருந்தே தம்மிடம் காம இச்சை அதிகம் எழுவதாகப் பெரும்பான்மையான பெண்கள் கூறுகின்றனர்; இன்னும் சிலர் மாதவிடாய் தோன்றியதற்குப் பிறகு தம்மிடம் இச்சை அதிகமாக வுள்ளது என்றும் செப்புகின்றனர். பின்னர்க் கூறிய நிலை சிலரிடமே காணப்பெறலாம், நான்கைந்து நாட்கள் பாலுறவு கொள்ளாதிருந்தமையால் ஏற்பட்ட விடாயே இதற்குக் காரணமாகலாம் என்றும் கருதலாம். மாதவிடாய் குப் பின்னர் பிறப்புறுப்புகளில் தோன்றும் மாற்றங்கள் உச்சநிலையிலிருப்பதில்லையர்தலின். உடலியலடிப்படையில் இதற்குக் காரணம் ஒன்றும் இல்லை. ஒரு சில பெண்கள்மிகக் குறைவான எண்ணிக்கையிலுள்ளோர்-மாதவிடா யின் பொழுதே பாலுறவு கொள்வதற்கும் விழைகின்றனர். மாதவிடாய் வட்டத்தின் நடுப்பகுதியில் ஒரு சில நாட் களில் பால் விருப்பம் அதிகமிருப்பதாக மேரிஸ்டோப்ஸ் குறிப் பிடுகின்ருர். ஆனல் பெரும்பான்மையான மருத்துவ நிபுணர்கள் மாதவிடாய் தோன்றுவதற்குச் சில நாட்களுசகு முன்னரும் மாதவிடாய் வட்டத்தின் நடுப்பகுதியில் முட்டைப் பக்குவம் அடையும் காலத்திலும் இச்சை அதிகம் இருப்பதாகக் கருதுகின்றனர். ஒரு பெண்ணின் மாதவிடாய் வட்டத்தில் அவளிடம் ஏற்படும் பால் துடிப்புகள் படத் தில் (படம்-55) காட்டப்பெற்றுள்ளன. தொடர்ந்தாற் போல் நிகழும் இரண்டு மாதவிடாய் வட்டங்களைப் படம் உணர்த்துகின்றது. ஆயினும், தனிப்பட்டோரிடம் இவ் வாறு தோன்றுவதில் மாற்றம் இருக்கலாம்; ஒவ்வொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/493&oldid=598632" இலிருந்து மீள்விக்கப்பட்டது