பக்கம்:இல்லற நெறி.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492

இல்லற நெறி


42

அன்பார்ந்த செந்தில்வேலனுக்கு,

நலன். நலனுக்கும் பிறவற்றிற்கும் அடிக்கடி எழுதுக:

மாதவிடாயின்பொழுது உறவு: ஒரு சில பெண்கள் மாத விடாயின் பொழுதே இணைவிழைச்சு புரிய விழைகின்றனர் என்று சென்ற கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? சில ஆடவர்களும் அந்நாளில் உறவு கொள்ள விழைகின்ற னர். இதனுல் இருபாலாருக்கும் தீங்கொன்றும் நிகழாதா? என்பதுபற்றி ஆராய விரும்புகின்றேன். முதலில் பண்டை யோரின் கருத்து யாது என்பதைக் காட்டுவேன்.

திண்டாநாள் முந்நாளும் நோக்கார் நீ ராடியபின் ஈராறு நாளும் இகவற்க என்பதே பேரறி வாளர் துணிவு." நோக்கார்-நினையார்; இகவற்க-பிரியற்க, அகலற்க.) என்பது ஆசாரக் கோவை. முதல் மூன்று நாட் கூட்டமும் நோய்க்கு இடமாதலானும், முதல் மூன்று நாளும் கருவமை யாமையானு முதல் மூன்று நாட்கள் தீண்டா நாட்கள்" ஆயின. இதுபற்றியே பூப்பு தீட்டு' என்று வழங்கப் பெறுகின்றது: இந்த ஆசாரக்கோவைச் செய்யுளே விளக்கு வதுபோல,

'பூத்த காலைப் புனையிழை மனைவியை நீரா டியபின் ஈராறு நாளும் கருவயிற் றறு உங் கால மாதலின் பிரியப் பெரு அன் பரத்தையி ற் பிரிவோன், 25

24 ஆசாரக் கோவை-42 器等。 இலக்-அகத்திணை-நூற்-87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/498&oldid=1285318" இலிருந்து மீள்விக்கப்பட்டது