பக்கம்:இல்லற நெறி.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடல்நலம் 49?

யைப்போலவே பெண்களே இத்தடையை முதன் முதலாகத் தொடங்கியிருக்க வேண்டும் என்றும். இப்பருவத்தில் பெண் னின் காம உணர்ச்சி ஏறத்தாழ அமைதி பெற்றிருப்பதால் அதையே காரணமாகக் கொண்டு இத்தகைய பால் தடையை விதித்திருக்க வேண்டும் என்றும் கருதுகின்ருர். நாளடைவில் படிப்படியாக இக் கட்டுப்பாடுகள் புதிய பொருளைத் தாங்கி பயமும் திகிலும் கொள்ளக் கூடியனவாக மாறிவிட்டன. ஆயினும் அவற்றின் மூலகாரணம் யாதாக இருப்பினும் இன்றைய நாகரிக வாழ்க்கையில் இத்தடைகள் மறைந்தே போயின. கருப்ப காலத்தில் உறவு கொள்வதை மக்கள் திங்கு தரும் என்ருே அல்லது பாபம் என்ருே கருதுவ தில்க்ல. சுருங்கக் கூறின், நாகரிக வாழ்வில் மக்கள் விலங் கினும் கேடாக மாறிவிட்டனர்.

மருத்துவரின் பரிந்துரை: கருப்பகாலத்தில் பெண்ணுக்கு யாதொரு கோளாறும் இல்லாவிடில் குழந்தை பிறக்கும் எட்டு அல்லது ஆறு வாரங்கள் முன்னர் வரையிலும் பாது காப்புடன் பாலுறவு கொள்ளலாம் என்பது இன்றைய மருத்துவ உலகம் ஆமோதித்த உண்மையாகும். ஒரு சிலர் கருப்ப்ம் ஏற்பட்ட இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை யிலும் பாலுறவுகூடாது என்றும் கருதுகின்றனர். கால மல்லாக்காலத்தில் பிரசவம் ஏற்பட்டுவிடும் என்ற சந்தர்ப் பத்திற்கு இடங்கொடுக்கக் கூடுமாதலாலும்,கருக்குழலிலும் கருப்பையிலும் பாக்டீரியா புகுவதற்கு ஒரு வாய்ப்பினை இாவிக்கக் கூடுமாதலாலும் கருப்பகால இறுதியில் பாலுற அஜன்த் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் எண்ணுகின் றனர். எனினும், ஒரு பெண்ணிடம் ஏற்கனவே கருக்குலைவு ஏற்பட்டிருந்தாலும். அல்லது கருக்குலைவினை முன்னறிவிக் கும் குருதிக் கறையும் வலிப்பும் தென்பட்டாலும் கருப்ப கால முழுவதிலும் பாலுறவினை மேற்கொள்ளவே கூடாது. இந்நிலையிலுள்ள பெண் மருத்துவர் யோசனையையும் அடிக் கடி நாடுதல் வேண்டும்.

இ-32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/503&oldid=598656" இலிருந்து மீள்விக்கப்பட்டது