பக்கம்:இல்லற நெறி.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498

இல்லற நெறி


கருப்பகாலத்தில் கலவியை மேற்கொள்வதிலும் அதனைப் புரிவதிலும் ஒரு நிதானமும்வேண்டும். அடிக்கடி யும் கூடாது; வன்மையாகவும் புரிதல் கூடாது. கருப்ப காலத்தில் யோனிக்குழல் சிறுத்துவிடும்; குறுகியும்போகும். கருப்பையின் மீது அமுக்கத்தைத் தவிர்க்க வேண்டு மாதலின் குறியினை ஆழச் செலுத்துதல் கூடாது. ஆகவே, இக்காலத்தில் மேற்கொள்ளப்பெறும் புணர்ச்சியில் பின்நிலை, பக்கவாட்டு-நிலை அல்லது கத்தரிக்கோல்-நிலை ஆகிய மூன்று நிலைகளும் ஒரு கருவினைத் தாங்கும் பெண்ணுக்கு மிகவும் ஏற்றனவாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

கருவுயிர்த்தலுக்குப்பின் கலவி: சாதாரணமாக ஒரு பெண் கருவுயிர்த்த ஆறு வாரங்கள் வரையிலும் அவளுடன் பாலுறவு கொள்வதைத் தவிர்த்தல் வேண்டும். பழங்காலத் தில் குழந்தை பால் குடிக்கும் வரையிலும் மனைவியிடம் கணவன் பாலுறவு கொள்ளல் கூடாது என்ற விதியும் இருந் தது. சிலரிடம் தாய் குழந்தையைப் பராமரிக்கும் வரை யிலும் பாலுறவு கொள்ளாப் பழக்கமும் இருந்து வந்தது. இக்காலம் மூன்று ஆண்டுகள் வரையிலும்,-ஏன்? அதற்கு மேலும்-நீடிக்கக்கூடியதாக இருந்ததால், கருவுற்ற பிறகு ஒரு பெண் சில யாண்டுகள் பாலுறவே கொள்ளும் வாய்ப்பே இல்லாதிருந்தது. இதனால்தான் பரத்தையிம் பிரியும் வழக்கமும் தமிழ் நாட்டில் இருந்தது போலும்! இத்தகைய குறிப்புகளே தமிழ் அகப்பொருள் இலக்கியங் களில் காணலாம். கருவுயிர்த்த பெண்ணிடம் உறவு கொள்ளுவதுபற்றிய தடை விவிலிய நூலில் அதிகக் கடுமை யானதாக இல்லை. மோசைக் சட்டபடி ஆண் குழவியைப் பெற்றெடுத்த பெண் நாற்பத்தொரு நாட்களும், பெண் குழவியைப் பெற்றெடுத்த பெண் எண்பது நாட்களும் தீட்டுள்ளவளாகக் கருதப் பெற்ருள். இத்தகைய வேறு பாட்டிற்கு உடலியல் பற்றிய காரணம் தெளிவாக அறியக்

9ே மோசைக் சட்டங்கள்-Mosaic Laws:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/504&oldid=1285321" இலிருந்து மீள்விக்கப்பட்டது