பக்கம்:இல்லற நெறி.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடல்நலம் 499

கூடவில்லை; ஆயினும், இந்த ஆறுவார இடைவெளி இன்றைய மருத்துவர் கூறும் ஆறு வாரத்துடன் பொருந்து கின்றது. கருப்ப காலத்திலும் கருவுயிர்க்கும்பொழுதிலும் பெண்ணின் பிறப்புறுப்புகள் மிக அதிகமான மாற்றங்களை அடைகின்றன என்பது வெளிப்படை; அவை சாதாரண மாகத் தம்முடைய பழைய நிலையை அடைவதற்குக் குறைந் தது ஆறு வாரங்களாவது வேண்டும் என்பது மருத்துவர் களின் சருத்து. எனவே, இக்காலத்தில் பாலுறவு கொள்ள மல் அவற்றின் இயல்பான சுருக்கத்திற்கு வாய்ப்புத்தர வேண்டியது மிசவும் இன்றியமையாதது என்பதை ஒவ் வொரு மனமக்களும் உணர்தல் வேண்டும்.

சூதக ஒய்வில்ை ஏற்படும் மாறுதல்கள்: முன்னொரு கடிதத்தில் சுமார் நாற்பத்தைந்து வயதில் பெண்களுக்கு ஏற்படும் சூதக ஒய்வினைக் குறிப்பிட்டேன் அல்லவா? பெண் களிடம் இந்த மாற்றம் ஏற்படுவதற்குச் சற்று முன்னரும் ஏற்படுங்காலத்திலும் எத்தனையோ விதமான கோளாறுகள் நேரிடலாம். அவற்றினையெல்லாம் ஈண்டுவிரிவாக விளக்கு தற்கு இடம் இல்லை; அவற்றை அறிஞர் நூல்களில் கண்டு தெளிக.32 ஒரு சில தகவல்களே மட்டிலும் ஈண்டுத் தருகிறேன். இப்பருவத்தில் ஏற்படும் மாறுபாடுகளே உடல் மாறுபாடுகள்; உளமாறுபாடுகள் என்று பகுத்துப் பேசலாம்.

உடல் மாறுபாடுகள்: முதலில் உடலில் ஏற்படும் மாறு பாடுகளைக் கூறுவேன். சில பெண்களிடம் பெண்ணுருவமே மாறிவிடுகின்றது: முகம் ஆண் முகம்போல் தோற்றமளிக் கின்றது. உடலெங்கும் ஊளைச் சதை திரளுகின்றது. இந்த வகைச் சதையும் குறிப்பாகக் கன்னங்கள், தாடைகள் போன்ற இடங்களில் அதிகமாகத் திரளுகின்றது. இதனல் திரைத்த தோலால் மூடப்பெற்ற தொங்கிய கன்னங்கள், கொழுத்த தாடை தோன்றி முக அழகையே மாற்றிவிடு கின்றன.

51. இந்நூல்-பக்கம் 147 sa. Illustrated Encylopaedia of sex—Chaps 54, 53, 54, 65–(Cadillac Publishing Company. New York.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/505&oldid=598660" இலிருந்து மீள்விக்கப்பட்டது