பக்கம்:இல்லற நெறி.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500

இல்லற நெறி


சிலருக்குக் கழுத்திலும் கொழுப்பு ஏறுகின்றது. புயங் களிலுள்ள உருண்ட வடிவம் மறைகின்றது; தோல் தொங்கி தசைகளும் மெதுவாகின்றன. கொங்கைகளிலும் அதிகச் சதையேறித் அவற்றைத் தொங்கச் செய்கின்றன. பெரும் பாலோரிடம் பால்சுரப்பிகளே முற்றிலும் மறைந்து விடுகின் றன; முலைக்கண்கள் எடுப்பாகவும் அதனைச் சுற்றியுள்ள இடம் அதிகக் கறுப்பாகவும் தோற்றமளிக்கின்றன; சில சமயம் அந்த இடத்தில் உரோமங்களும் தோன்றுவதுண்டு. உடலிலும்: குறிப்பாகப் பால் உறுப்புகள் கால்கள் ஆகிய வற்றில், அதிக உரோமங்கள் தோன்றுகின்றன; முதுகிலும் பிற இடங்களிலும் அருவருப்பான தவிட்டு நிறப்புள்ளிகள் தோன்றுகின்றன.

பெண் குறயின் மேலுள்ள தசைகளும் பெரிய உதடு களும் சுருங்குகின்றன. பெண் குறியும் சிறிதாகித் தொங்கு கின்றது. சிறிய உதடுகளும் வற்றி அதிலுள்ள மடிப்புகள் மாறுகின்றன. யோனிக்குழலிலும் மடிப்புகள் மறைந்து வழுவழுப்பான தோற்றம் ஏற்படுகின்றது. அதிலுள்ள சதை யும் வற்றி, குழலும் படிப்படியாகச் சுருங்கி, குறுகலாகவும், குட்டையாகவும், நீளும் தன்மையை இழந்தும் போகின்றது. ஒதாடக்கத்தில் கருப்பையில் அதிகக் குருதி ஏறி அளவில் பெருத்த போதிலும், நாளடைவில் அதுவும் சுருங்கி, அள வில் கிறியதாகவும், மெல்லியதாகவும், குறுகலானதாகவும் மாறித் தட்டையான வடிவங் கொள்ளுகின்றது. சூற்பை களும், கருக் குழல்களும் சுருங்குவதுடன் சூற்பைகள் ஃபாலி கள் உற்பத்தியை இழப்பதால் எண்டோகிரின் மண்டலத்தி லேயே பெருமாற்றம் நேரிடுகின்றது. இதல்ை பலவிதக் கோளாறுகள் எழுகின்றன. இக்காலத்தில் பெண்களிடம் பல்வேறு நோய்களும் தோன்றலாம். அதிகமாக வியர்த்துக் குளிர் ஏற்பட்டு முகம் சிவத்தல், மயக்கம், பல்வேறுவிதக் காது ஒலிகள், புயங்களிலும கால்களிலும, குத்தல்வலிகள், தலைவலி, குடல் கோளாறுகள், தூக்கமின்மை, வாந்தி, கருப்பைப் புற்றுநோய் போன்ற தொல்லைகளால் பெண்கள் தொல்லையுறுவர். இவற்றை விரிக்கின் பெருகும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/506&oldid=1285322" இலிருந்து மீள்விக்கப்பட்டது