பக்கம்:இல்லற நெறி.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504

இல்லற நெறி


தன் உடலைப் பற்றிய கவனம் போன்றவற்றில் நாட்டமுள்ள பெண்களும் மேற்கூறிய எல்மீைறிய செயல்களுக்கு இலக் காகின்றனர். இதற்கு மாமுகப் பெரும்பான்மையான பெண் கள் இன்பகரமான இல்வாழ்க்குப் பின்னர் யாதொரு அக முரண்பாடுகளின்றியே இந்தப் பருவத்தைத் தாண்டு கின்றனர். இதனைக் கடந்த பின்னர் இயல்பாக நடை பெற வேண்டியவற்றில் தன்னையே மறந்து மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த வாழ்க்கையில் திளைக்கின்றனர்.

காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களோடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. 6 என்று தொல்காப்பியர் கூறும் குறிக்கோளுக்கு இலக் காகின்றனர். இக்காலத்தில்தான் சில கணவன்-மனைவிமாரி டம் உண்மை நட்பும் அன்னியோனியமும் ஏற்படுகின்றன,

சூதக ஒய்வுக்குப் பின்னர் கலவி: ஒரு பெண்ணிடம் முற்றிலும் மாதவிடாய் ஒழுக்கு நின்றபின்னர், பால் விழை வும் மறைந்து விடுகின்றதா, அக்காலத்தில் அவள் கலவி புரியலாமா என்று நீ வினவலாம் கூறுவேன்; சூதக ஒய்வு ஏற்பட்ட நீண்டகாலம் வரையிலும் பால் விழைவு பென்களிடம் இருக்கத்தான் செய்கின்றது: சில ரிடம் அதிகமாகவும் உள்ளது. இனப் பெருக்கத் திறன் நின்றுபோவது பாலூக்கம் மறைவதற்கும் காரணமாதில்லை. வயதான பெண்ணிடம் சாதாரணமாகப் பால் வேட்கை மறைதல் இயல்பே; ஆயினும் சூதக ஒய்வு நின்ற பின்னரும் ஒரு பெண்ணிடம் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள்வரை யிலும்-அதற்கு மேலும்-தீவிரமான பால்விடாய் உள்ளது. எனவே, அறுபதுயாண்டுகட்கு மேலும் ஒருபெண் மட்டான முறையில் பாலுறவு கொள்ளலாம்: சூதக ஒய்வுக் காலத்தில் உள்ளிருக்கும் பாலுறுப்புகளில் மிகத் தளர்ச்சி ஏற்பட்டு

娜娜。 தொல்-பொருள்-கற்பு-51 (இளம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/510&oldid=1285324" இலிருந்து மீள்விக்கப்பட்டது