பக்கம்:இல்லற நெறி.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடல்நலம் 565

துவத் துறையிலும் நேரிட்டுள்ள பல்வேறு வளர்ச்சிகளின் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது என்று சருதலாம். திருமணத்திக்கு முன்னர் பாலுறவுகொள்வதையும் மேட்ை டார் அங்கீகரித்து வருகின்றனர்; நம்நாட்டில் அதனை ஒரு வரும் அங்கீகரிப்பதில்லை; அதற்கு ஆதரவும் தருவதில்லை. பண்டையோர் கண்ட களவியலிலும் தலைவன்-தலைவியர் உள்ளுறு புணர்ச்சியை மேற்கொண்டதாகவே கொள்வது பொருத்தமாகும்; இது முன்னரும் காட்டப் பெற்றது.' இது.ற்றி ஒழுக்க, சமய அடிப்படை ஒருபுறமிருக்க திருமண உறவுக்கு அப்பார் பட்ட உறவுகளும் இன்று எங்கனும் பெரு வழக்காக உள்ளன. டாக்டர் டிக்கின்ஸன் 1 என்பார் கருத்துப்படி இவற்றிற்குக் கருப்பம், தொற்று,63 உளவு வெளிப்பாடு' ஆகிய மூன்றும் முக்கிய தடைகளாக உள்ளன. இவற்றுள் முதல் இரண்டு கூறுகளும் பெரும் பாலாக நீங்கிவிட்டன. நவீன கருத்தடை முறைகள் விரும் பாத கருப்பத்தைப் பெரும்பாலும் குறைத்துவிட்டன: எதிர் நச்சு மருந்துகளின் வளர்ச்சி தொற்றினுல் வரும் விபத் துக்களைப் பெரும்பாலும் போக்கிவிட்டன என்று சொல்ல லாம். மூன்ருவதாக உள்ள தடை சமூகம் கடியும் உளவு வெளிப்பாடேயாகும். இதுவும் இன்றைய நாகரிக வளர்ச்சி யில் குறைந்துகொண்டு வருகின்றது. எனவே, பாலுறவு களில் பண்டிருந்த கட்டுப்பாடுகள் நீங்கிச் சுதந்திரம் தோன்றியுள்ளது. இந்த வகை மனப்பான்மையினல் சமூக மும் இளைஞர் உலகமும் பாழடைந்து வருகின்றன. காட்டு மிருண்டிகளிலும் கேவலமாக மக்களின் போக்கு போய்க் கொண்டுள்ளது. என்னே இந்த நாகரிகத்தின் கொடுமை!

60. இந்நூல்-பக்கம், 527 61; 19.3% sirouair—Dickinson. 63. 505'iljiħ-Conception? 63. Gigini p-Infection. 64: உளவு_வெளிப்பாடு-Deteciion: 65; எதிர் நச்சு மருந்து வகைகள்-Antibiotics,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/515&oldid=598682" இலிருந்து மீள்விக்கப்பட்டது