பக்கம்:இல்லற நெறி.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடல்நலம் 廖置五

விட்டால் பேராபத்துதான். திருமணம் ஆன பெண் விருப்ப மின்றித் தற்செயலாகக் கருவுற்றலே அதனை அழிப்பது சங்கடம். திருமணத்திற்கு முன்னதாக அவள் கருவுற்று விட்டால் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் பயங்கரமானவை; பல வழிகளிலும் பெண்ணின் வாழ்க்கையையே சீரழித்துக் குலைப்பவை என்பதை ஒவ்வொரு பெண்ணும் நன்கு உணர் தல் வேண்டும். இங்ங்னம் ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கே ஊறு விளைவிக்கும் வண்ணம் தகாக முறையில் பாலுறவு கொள்வது எவ்வளவு கேடான-பாபமான-செயல் என் பதை ஒவ்வொரு ஆண் மகனும் உணர்தல் வேண்டும்.

பழங்காலத்தில்- ஏன்? அண்மைக் காலம் வரையிலும்பெரும்பாலும் திருமணங்கள் இளமையிலேயே நடைபெற் றன: உயிரியல் முதிர்ச்சி ஏற்பட்டதும் பாலுறவுகளும் நடை பெற்று வந்தன. பல்வேறு காரணங்களால் இன்று திரு மணங்கள நிறைவேறுவது சாத்தியப்படுவதில்லை, பொருளா தாரநிலை, பெண் கல்வியில் முன்னேற்றம், வரதட்சணமுறை போன்றவையே இந்நிலைக்குக் காரணங்கள் என்று சொல்ல லாம். ஒருபக்கம் ஒழுக்க, அற, சமய, சட்டக் கட்டுப் பாடுகள் திரு மணத்திற்கு முன்னர் நடைபெறும் பாலுறவு களைக் கடிந்தவண்ணமிருக்கின்றன. எனினும், அதே சமயத் தில் இன்னெரு பக்கம் பாலுணர்ச்சி வணிக முறையில் சதா கரண்டப்பெற்று வருகின்றது; பால் விழைவு பல்வேறு முறைகளில் துண்டப்பெறுகின்றது. நாடக மேடைகள், பேசும் படக் சாட்சிகள், புற்றீசல்கள்போல் அன்ருடம் பத்திரிகைகளில் பிறக்கும் சிறு கதைகள், தொடர்கதைகள், வண்ணப் படங்களுடன் வெளியாகும் பருவ வெளியீடுகள். செய்தித்தாள்கள், வணிக விளம்பர முறைகள்- இவையாவும் பெரும்பாலும் பால் விழைவினைத் துாண்டும் மூலங்களாக அமைந்துள்ளன. இங்ஙனம் இளம் பருவத்தினர் விடாது ஒரு பக்கம் பால் தூண்டலையும் மற்ருெரு பக்கம் கட்டுப்பாடுகளை யும் ஒரு பக்கம் காமக்கிளர்ச்சியினையும் மற்ருெரு பக்கம் அடக்கவேண்டிய நிலையினதும் மேற்கொள்ள வேண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/517&oldid=598686" இலிருந்து மீள்விக்கப்பட்டது