பக்கம்:இல்லற நெறி.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512

இல்லற நெறி


யுள்ளது. இஃது அவர்களின் உடல், உள்ளக்கிளர்ச்சி உறுதிப் பாட்டில் பெரிய அளவில் இடர் விளைவிக்கின்றது; உடல் நலக் கேட்டினையும் உளக்குலைவினையும் உண்டாக்குகின்றது.

மேற்கூறிய முரண்பாட்டினைச் சமாளிக்கப் பலர் பல கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். ஒரு சாரார் திருமணத் திற்கு முன்னர் பெண்ணிடமுள்ள ஒழுக்கத்திற்கும் சமூகப் பண்பிற்கும் அடிப்படையாகவுள்ள கற்பு மிகவும் இன்றியமை யாவது என்றும், எவ்வாற்ருலும் அதனை நிலை குலையாமல் பாதுகாக்கவேண்டும் என்று கூறுவர். திருமணம் முடிவு பெறும் வரையிலும் சமய, ஒழுக்க அடிப்படையில் பால் அடக்கம் பல்லோராலும் விரும்பப்பெறுகின்றது என்றும், அது மன உறுதியையும் சால்பினையும் வலுப் படுத்துவதால் சொந்த முன்னேற்றத்திற்கும் அருஞ்செயல் திறத்திற்கும் நன்மை பயப்பதாகவும் உள்ளது என்றும் உரைப்பர். மற் ருெரு சாரார் இளமையிலேயே மணம் முடித்துவிடவேண்டும் என்றும், அப்படி முடியாவிடில் சமூகம் அங்கீகரிக்கக்கூடிய முறையில் பாலுறவுகளைக் கொள்ளும் திருமண முன்னேற் பாடுகளைச் செய்து விடவேண்டும் என்றும் பகர்வர். இந்த ஏற்பாட்டினைச் சட்டம் ஒப்புக்கொள்ளல் வேண்டும்என்றும், இந்த ஏற்பாட்டில்ை தொடக்கத்தில் யாதொரு நிரந் தரப் பிடிப்போ அல்லது பொருளாதாரப் பொறுப்போ இருக்கக் கூடாதென்றும் வரையறையும் காட்டுவர், இத்தகைய உறவுப் பொருத்தம்-நிச்சிதார்த்தம்-ஒரு குறிப் பிட்ட கால எல்லேயைத் தாண்டியவுடன் அல்லது பெண் கருவுற்றதற்குப் பின் நிாந்தரமான திருமணக்கூறுகளை யெல்லாம் அடைந்துவிட வேண்டும் என்று யோசனையும் கூறுவர். இன்னும் ஒரு சாரார் வயதுவந்தோரின் பால் நடத்தையில் சமய, சமூகக் கட்டுப்பாடுகளே கூடாது என்றும் இன்றைய வாழ்வில் கட்டுப்பாடுகள் தளர்ந்துவரும் முறையே சரியென்றும் கருதுகின்றனர். இவர்கள் விலங்கு வாழ்க்கை காட்டுமிருண்டி வாழ்க்கை ஆகியவற்றைவிடக் கேடானநிலை மக்கள் வாழ்க்கையில் நேரிட்டுவிடும் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/518&oldid=1285328" இலிருந்து மீள்விக்கப்பட்டது