பக்கம்:இல்லற நெறி.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடல்நலம் 5 I &

எண்ணிப் பார்ப்பதே இல்லை. ஆயினும், இந்த மூவகை யோசனைகளுள் ஒன்ருவது இன்றையத் தேவைகளைத் திருப்தி யானமுறையில் சமாளிக்கக்கூடியதாக இல்லை. இளைஞர் களின் பால் தேவைகளில் எழும் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய சமூக அங்கீகாரம்பெற்ற யாதொருமுறையும் இன்னும் கண்டறியப் பெறவில்லை என்பதை நாம் வெளிப்படை யாக ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

ஓர் எச்சரிக்கை: திருமணத்திற்கு முன்னர் உறவு கொள்வதில் ஒன்றை வற்புறுத்த விரும்புகின்றேன். பாலுறவு என்பது தனிப்பட்டோரைப் பொறுத்ததன்று: அதில் வேருெருவருடைய உரிமைகளும் சலுகைகளும் பங்கு பெறுவதுடன் பல சமூகச் சிக்கல்களும் அடங்கியுள்ளன. ஆகவே, பால் நடத்தைப்பற்றிய சமூகக் கட்டுப்பாடு மிக மிக இன்றியமையாதது; பல சமூகங்களிடையேயும் இத் தகைய சட்டுப்பாடு காணப்பெறுகின்றது. இன்றைய ஒழுக் கம் பற்றிய விதிகள் நிலவும் வரை பால் நடத்தையில் சுதந் திரம் இயலாததொன்று. சமூகம் அங்கீகரித்த ஒழுக்க விதி களையும் கட்டுப்பாடுகளையும் மீறி இரகசியமாக மேற் கொள்ளப்பெறும் உறவு முறைகள், பால் துடிப்புகளே மன மறிந்து அடக்குவதால் உண்டாகும் கேடுகளேவிட அதிக மான கேடுகளை விளைவித்து ஆளுமைக் குலைவினையும் உள்ளக் கிளர்ச்சிச் சமனிலைச் சீர்கேட்டையும் உண்டாக்குகின்றன. சமூக மரபு முறைகளைப்பற்றி ஒருவர் அறிவு நிலையில் சுதந் திரமாக இருக்கலாம்; ஆயினும் உள்ளக் கிளர்ச்சி முறையில் கட்டுப்பட்டே இருக்கவேண்டியுள்ளது. இங்ங்ணம் உயிரிய லுக்கும் பண்பாட்டிற்கும், விருப்பத்திற்கும் உள்தடைக்கும் இடையேயுள்ள அடிப்படையான முரண்பாட்டினை ஒவ் வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் சமாளித்துத் தீர்வு காணவேண்டும்.

68. & upgoslål-Balance

@一33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/519&oldid=598690" இலிருந்து மீள்விக்கப்பட்டது