பக்கம்:இல்லற நெறி.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடல்நலம் 515

பிறப்பே குடிமை ஆண்மை ஆணடோடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.??

என்ற தொல்காப்பிய நூ. பாவில் கண்ட பத்துவித ஒப் புமைகளும் கணவன்-மனைவியரிடையே அமைதல் பெரிதும் வேண்டற்பாலது. இந்தப் பத்தினையும் இளம்பூரணர் விளக்கி யுள்ளபடி கூறுவேன். பிறப்பு என்பது, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் ஆயர் வேட்டுவர் குறவர் நுளையர் என்ருற்போல் வரும் குலம். குடிமை என்பது, அக்குலத்தி லுள்ளேயர் எல்லோரும் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப் பாகிய ஒழுக்கம்பற்றிய குடிவரவு. ஆண்மை என்பது, ஆண்மைத் தன்மை; அஃதாவது, ஆள்வினையுடைமையும் வவி பெயராமையுமாம் அது தலைமகள் மாட்டுப் பெண்மை யாகும்; அஃதாவது பெண்டிர்க்கு இயல்பாகிய நாணம் மத லாயினவும் பெண்ணிர்மையும். ஆண்டு என்பது ஒருவரின் ஒருவர் முதியரின்றி ஒத்த பருவத்தராதல்; அது குழவிப் பருவங் சழிந்து பதினறு பிராயத்தானும் பன்னிரண்டு பிரா யத்தாளும் ஆதல். உரு என்பது, வனப்பு. கிறுத்த காம வாயில் என்பது, நிலைநிறுத்தப்பட்ட புணர்ச்சிக்கு வாயில். அஃதாவது, ஒருவர்மாட்டு ஒரு வர்க்கு நிகழும் அன்பு. கிறை என்பது, அடக்கம். அருள் என்பது, பிறர் வருத்தத்திற்குப் பரியும் கருணை உணர்வு என்பது, அறிவு. திரு என்பது. செல்வம். இவற்றை இக்காலத்தியல்புகளோடு எண்ணி ஏற்றவற்றை அறிந்து கொள்வாயாக

நட்பு என்பது 'காமஞ்சான்ற கடை கோட்காலே’ என்ற தொல்காப்பிய நூற்பாவில் குறிப்பிட்ட உணர்வு ஆகும். அன்பும் இதில் அடங்கியுள்ளது. பால் பொருத் தத்தின் இன்றியமையாமைவயப்பற்றிக் குறிப்பிட்டவை.

78. தொல்-பொருள்-மெய்ப்-25 (இளம்) 73. தொல்-பொருள்-நூற். 190 (இளம்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/521&oldid=598696" இலிருந்து மீள்விக்கப்பட்டது