பக்கம்:இல்லற நெறி.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516

இல்லற நெறி


அனைத்தும் வேண்டற்ப லவை. மணவாழ்க்கையில் மக்கட் பேறின்றேல் அது பாலை நிலம் போல் வறண்ட வாழ்க்கை

ாகும்.

மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு." என்ற வள்ளுவர் வாக்கையும் ஈண்டு ஒர்க.

இம்மை யுலகத் திசையொடும் விளங்கி மறுமை யுலகமும் மறுவின் றெய்துவ செறு தரும் விழையும் செயிர் தீர் காட்சிச் கிறுவர்ப் பயந்த செம்ம லோர்.18 என்ற அகப்பாட்டடிகளில் பொதிந்துள்ள கருத்தினையும் உன்னுக. கணவனையும் மனைவியையும் இறுக்கப் பிணிக்கும் கண்ணி குழந்தை என்ருல் அது மிகையன்று.

பொருளாதாரக் காப்பு: திருமணத்தில் பொருளாதாரம் நேர் முறையில் பங்கு பெருவிடினும், அதுவே திருமணத்தை வெற்றியாக்கும் பெருவிசையாகத் திகழ்கின்றது. வாழ்க்கை நடத்துவதற்கு ஒரளவு செல்வம் வேண்டுமேயன்றி, அதற் காக மணமக்கள் பனப் பேயாட்டம் ஆட வேண்டிய இன் றியமையாமை இல்லை. வேண்டிய அளவு அன்பிருந்தும், பால் பொருத்தப்பாடு இருந்தும், மக்கட்பேறு இருந்தும் பல திருமணங்கள் வாழ்க்கைத் தேவைகளின்மையால், வறுமையால், பொருளாதாரப் பாதுகாப்பின்மையால்ா முறிந்து போகின்றதை நாம் காணுமல் இல்லை. இப்பொரு ளாதாரக் குறைவினல் எத்தனையோ ஆடவரும் பெண்டிரும் மணமின்றி இருப்பதையும் காண்கின்ருேம் எனவே, திருமண வெறிக்குப் பொருளாதாரக் காப்பும் மிகவும்

74. குறள்-60

75. அகம்-65 வரி 1.4)

76. 56&rawf-Link

77. Qurgerrara's smuu-Economic security

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/522&oldid=1285330" இலிருந்து மீள்விக்கப்பட்டது