பக்கம்:இல்லற நெறி.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-9

மகிழ்வுடைய இல்வாழ்க்கை

'அறன் எனப்பட்டதே இல் வாழ்க்கை என்று வள்ளு வர் போற்றும் இல்வாழ்க்கை மகிழ்வுடையதாக அமைதல் வேண்டற்பாலது. முன்னையோரின் வாழ்க்கை பின்னை யோருக்கு வழிகாட்டியாக அமையக்கூடியது. காலப் போக்கில் முன்னேயோர் வாழ்க்கை எத்தனையோ முறை களில் - போக்குகளில் - விரிந்தும் திரிந்தும் மாற்றம் அடைந்துள்ளது நாகரிகம் வாழ்க்கையை நானு விதங் களில் மாற்றம் அடையச் செய்துவிட்டது. எனவே, திருமணத்தை உளவியல் சமூக இயலின் அடிப்படையில் ஆராய்தல் இன்றியமையாததாகின்றது. பண்டைக் தமிழரின் திருமண முறைகள், ஆரியரின் எண்வகை மணங்கள் இரண்டற்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகள், களவு-கற்பு விளக்கம், நாகரிக வாழ்வின் விளைவுகள், திருமண வாழ்க்கையில் தம்பதிகளிடையே எழும் முரண் பாடுகள், அவை எழுவதற்குக் காரணங்கள், அவை எழும் மூவகை மூலங்கள், திருமண வெற்றிக்கான கூறுகள் பற்றிய ஆராய்ச்சிகள், திருமணத்திற்கு முன்னர் மணமக் கள் மே கொள்ள வேண்டிய இரண்டு படிகள், மணமக்கள் மகிழ்ச்சியான வாழ்வு பெறுவதற்குரிய குறிப்புகள் ஆகிய செய்திகளும் அவற்றுடன் தொடர்புள்ள பிறசெய்தி களும் இப்பகுதியில் ஆறு கடிதங்களில் (44-49) ஒரளவு விளக்கம் பெறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/525&oldid=598704" இலிருந்து மீள்விக்கப்பட்டது