பக்கம்:இல்லற நெறி.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடைய இல்வாழ்க்கை 5豊麗

மையால் ஒன்றியுயர்ந்த பாலதானை' என்றும் ஆசிரியர் பெற வைத்தமையை எண்ணி உணர்க இறையனர் களவி யலுரையாசிரியரும் காதலர் கருத்தொருமித்து ஆதாவு பட் டதற்குப் பால்வரைக் தெய்வமே (ஊழே) காரணம் என்று வற்புறுத்துவர். ஒளிப்பினும் ஊழ்வினை ஊட்டாது கழியாது'...வடகடலிட்ட ஒரு நுகம் ஒரு துளை தென்கட லிட்ட ஒரு கழி சென்று கோத்தாற் போலவும், வெங்கதிர்க் கனலியும் தண்கதிரி மதியமும் தங்ககி வழுவித் தலைப்பெய்

நிமித்தமாகத் தமியராவர்" என்ற உரைப்பகுதியால்? இதனையறியலாம்.

தமிழரின் மணவகைகள் : ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழும் ஒழுக்கத்தினைப் பண்டையோர் அகத்தினை' என்ற பெயரால் குறித்தனர். அகத்திணை என்பது, அகவொழுக்க மாகும். திணை-ஒழுக்கம். இந்த ஒழுக்கத்தைக் கைக்கிளே. ஐந்தினை, பெருந்தினை என ஏழு வகையாகப்பிரித்து உரைத் தனர் பண்டைப் பெரியோர்கள். கைக்கிளை என்பது, ஒரு தலைக்காமம். ஒருவன் ஒருத்தியென்னும் இருவருள் ஒருவர் மட்டும் அன்பினுல் கூடி வாழ்தலில் அளவிறந்த வேட்கை யுடையராகவும். மற்றவர் அவரது அன்பின் திறத்தை உணர்ந்து கொள்ள முடியாத நிலையிலும் இருக்கும் நிலையே ஒருதலைக் காமம் ஆகும். இதனை இளம்பூரணர் பெருமை இல்லாத தலைமக்கள் உறவு’ என்பர்; கை என்பது தத்தம் குறிப்பிற் பொருள் செய்வதோர் இடைச்சொல் என்று கூறி கைக்குடை, கையேடு, கைவாள் என்ற சொற்ருெடரில் கை சிறுமைபற்றி வந்துள்ளது என்று சான்றுகள் காட்டி விளக்கு வர். ஐந்திணை என்பது, ஒத்த காமம்; தலைவனும் தலைவியும் ஒத்த அன்பின் காரணமாகக் கூடிவாழும் ஒழுக்கம். இறை யனர் களவியலாசிரியர் இதனை அன்பொடு புணர்ந்த ஐந் திணை' என்று குறிப்பிடுவர். அது குறிஞ்சி, முல்லை, பாலே, மருதம், நெய்தல் என ஐந்து வகைப்படும். அதில் புணர்தல்,

இறைய களவி-நாற் -இன் உரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/527&oldid=598708" இலிருந்து மீள்விக்கப்பட்டது