பக்கம்:இல்லற நெறி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணப்பொருத்தம் 皓7

கோலும் தன் நீளத்தை அச்சாக வைத்து இரண்டாக உடை கின்றது. ஆகையால் உயிரணு இரண்டாகப் பிரியுங்கால் ஒவ்வோர் உயிரணுவிலும் 23 இணை நிறக்கோல்கள் அமை கின்றன. இவை யாவும் கருவுற்ற முட்டையினின்றே தோன் றியவையாதலின், ஒவ்வோர் உயிரணுவிலும் மரபுவழிக் கூறுகள் அடங்கியுள்ளன.

இவ்விடத்தில் இன்னெரு முக்கிய குறிப்பையும் நீ நினை வில் இருத்த வேண்டும். ஒவ்வொரு மானிட உயிரணுவிலும் 23 இணை நிறக்கோல்கள் இருக்கின்றன என்று மேலே கூறி னேன் அல்லவா? அதல்ை கருவுறுவதற்குக் காரணமான முட்டையிலும் விந்தணுவிலும் 23 இணை நிறக்கோல்களே இருக்குமென்று நீ கருதுவாய். அதுதான் இல்லை. ஒருவர் பால் முதிர்ச்சி அடையுங்கால் இன்னுெரு வகையான உயிரணுப்பகுப்பு அவர் உடலில் நடைபெறுகின்றது. இதன் மூலமாகத்தான் இனப்பெருக்க உயிரணுக்கள் பெண்ணி டத்தில் முட்டையாகவும் ஆணிடத்தில் விந்தணுவாகவும் அமைகின்றன. இது குறைத்துப் பகுத்தல்" என்று வழங்கப் பெறும். இதில் இனப்பெருக்க உயிரணு ஒவ்வொன்றிலும் முதலிலுள்ள உயிரணுக்களில் பாதியே கிடைக்கின்றது. சாதாரண உயிரணுப்பகுப்பில் நிறக்கோல்கள் இரட்டிக் கின்றன. ஆனல், குறைத்துப் பகுத்தல் செயலில் அவ்வினை நிறக்கோல்கள் பிரிந்து ஒவ்வொன்றும் சேய் உயிரணுவிற்குச் செல்லுகின்றது. பின்னர் ஆண் பெண் இனப்பெருக்க உயிரணுக்கள் இணையுங்கால் திரும்பவும் முழு நிறக் கோல்களின் தொகுதியைக் கொண்ட உயிரணு பிறக்கின் றது. இதுவே கருவுறுதல் என்பது. இவ்வாறு உருப்பெற்ற உயிரணு மீண்டும் பிரிந்து வளர்ந்து குழந்தையாகின்றது.

53. Q&or—Pair: 54. Limógp£ité9—Sexual maturity. 55. Qöriot (535 plunggol—Reproductive cell; 56. Gopāgau uéjà5á–Reduction division.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/53&oldid=598714" இலிருந்து மீள்விக்கப்பட்டது