பக்கம்:இல்லற நெறி.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடைய இல்வாழ்க்கை 527

காந்தருவம்-களவு: ஒற்றுமை: மேற்கூறிய எண் வகை மணத்தினுள்ளும் அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகிய மூன்றும் தமிழர் கூறியுள்ள கைக்கிளையின் பாற்படுவன என்றும், பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வம் என்ற நான்கும் பெருந்த்ணேயில் டங்கும் என்றும் காந்தருவம் மட் டிலும் ஐந்திணையின்பாற்படும் என்றும் இளம்பூரணரும் நச்சினர்க்கினியரும் கூறுவர். கந்தருவ குமாரரும் கன்னிய ரும் தம்முன் எதிர்ப்பட்டுக் கண்டு இயைந்தாற்போலத் தலை வனும் தலைவியும் தம்முள் எதிர்ப்பட்டு புணர்வது கள வொழுக்கமாகும் எனக் காந்தருவத்திற்கும் களவொழுக்கக் திற்குமிடையே அமைந்த ஒற்றுமையினை விளக்கியுள்ளார் நச்சிஞர்க்கினியர்.

இரண்டற்குமுள்ள வேற்றுமை: இனி, இந்த இரண்டற்கு முள்ள வேற்றுமைகளையும் நீ அறிதல் வேண்டும். காந்தருவ வழக்கில் மெய்யுறு புணர்ச்சி முதற்கண் தோன்றுவது. அதன் பயிற்சியால் உள்ளப் புணர்ச்சி நிலைபெற்றுச் சாகு மளவும் கூடி வாழ்தலும் உண்டு; உள்ளப் புணர்ச்சி தோன்ருது தம் எதிர்ப்பட்டாரைக் கூடி மாறுதலும் உண்டு: என்றும் பிரியா நிலையில் நிறை கடவாது அன்பினுற் கூடும் உள்ளப் புணர்ச்சியே ளவொழுக்கத்தின் சிறப்பாகும். உல கியலில் உளவாகுட பலவகை இடையூறுகளால் ஒருவரை யொருவர் மணந்துகொள்ள இயலாமல் உள்ளப் புணர்ச்சி யளவே கூடிவாழ்ந்து, பின்னர் இறந்த காளேயரும் தமிழ கத்து இருந்தனர். மணிமேகலையிற் கூறப்படும் தருமதத்தன், விசாகை என்னும் இருவர் யாழோர் கூட்டமாகிய காந்தருவ முறையிற் பொருந்தியவர்கள் எனத் தம் ை நோக்கி ஊராரி கூறிய பழிமொழியை விலக்கித் தம் வாழ்நாள் முழுவதும் மெய்யுறு புணர்ச்சியை விரும்பாது உள்ளப்புணர்ச்சியளவில் நின்று உயிர் துறந்த வரலாற்றின ஈண்டுச் சிந்திப்பாயாக. மேற்கூறிய இதுவே தமிழியல் வழக்கமான களவுக்கும் வடவர் மணமாகிய காந்தருவத்திற்கும் உள்ள உயிர் நிலை யாய வேறுபாடாகும் என்பதையும் உளங்கொள்க. அன் பொடு புணர்ந்த ஐந்தினை மருங்கிற் காமக் கூட்டம்' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/533&oldid=598722" இலிருந்து மீள்விக்கப்பட்டது