பக்கம்:இல்லற நெறி.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528

இல்லற நெறி


தொல்காப்பியரும், 'அன்பொடு புணர்ந்த ஐந்திணை' என்ற இறையனர் களவியலாசிரியரும், அன்புடை நெஞ்சந் தாங் கலந்தனவே. எனவே குறுந்தொகைப் புலவரும் உள்ளப் புணர்ச்சியொன்றையே களவிக்குரிய சிறப்பியல்பாக விரித் துரைத்துள்ளமையையும் அறிக. ஆரிய மனமாகிய காந்தரு வத்திற்கும் தமிழர் நெறியாகிய களவொழுக்கத்திற்கும் உள்ளவேற்றுமையினையும் களவொழுக்கத்தின் தூய்மையின யும் ஆரிய அரசன் பிரகத்தனுக்கு அறிவிக்கும் நோக்கத்து டன் கபிலர்பாடிய குறிஞ்சிப்பாட்டு இருவகை நெறிகட்கும் உள்ள வேற்றுமையினை இனிது விளக்குவதாகும். இந்நுட் பத்தினை நன்குணர்ந்தே நச்சிஞர்க்கினியாரும், காந்தருவற் குக் கற்பின்றி அமையவும் பெறும், ஈண்டுக் கற்பின்றிக் களவே மையாது' என்று கூறியுள்ளவை நோக்கத்தக்கது. இக்களவொழுக்கம் ஒழுகும் ஒருவனும் ஒருத்தியும் ஒப்புயர் வில்லா உயர் மக்களாவர். அவர்கள் இருவரிடையேயும்,

பிறபயே குடிமை ஆண்மை யாண்டோ(டு) உருவு கிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே?

என்ற தொலகாப்பிய நூற்பாலில் கூறப்பெற்றுள்ள பத்து வகைப் பொருத்தங்களும் அமைந்திருத்தல் வேண்டும்.

களவு-விளக்கம்: இனி, மேற்குறிப்பிட்ட களவு என்ன என்பதை விளக்குவேன். ஒத்த பருவம் உருவம் முதலிய பத்தும் உள்ள ஒருவனும் ஒருத்தியும் தம்மைக் கொடுப்பாரும் அடுப்பாருமின்றிப் பால்வரைத் தெய்வத்தின் ஆணையால் தாமே எதிர்ப்பட்டுக் கூடும் கூட்டமே களவாகும். இம் முறையில் தமக்கேற்ற வாழ்க்கைத்துணைவரைத் தாமாகவே தேர்ந்தெடுத்துக் கொள்வா, இஃது இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், தோழியிற் கூட்டம்

6. தொல்-பொருள்-களவு- நூற் (நச்) 7. தொல்-பொருள்-மெய்ப்-நூற் 25,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/534&oldid=1285336" இலிருந்து மீள்விக்கப்பட்டது