பக்கம்:இல்லற நெறி.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532

இல்லற நெறி


காரணங்களால் பண்டிருந்த குடும்ப வாழ்க்கை மாறிப் புதிய விதமான குடும்ப அமைப்பு ஏற்பட்டுள்ளது பல காரணங் களால் கணவனும் மனைவியும், மக்களும் பெற்ருேரும், தாம் பழகிவந்த சமூகத்தை விட்டுப் புதிய சமூகங்களிடையே வாழவேண்டிய இன்றியமையாமையும் வாய்ப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. பெண்களும் சம்பாதிக்கவேண்டும் என்ற நிலையும் சில குடும்பங்களில் ஏற்பட்டு வருகின்றது. குடும்பம் ஒரு தனி நிலையம்போல் இயங்கி வந்தது மாறி அது சிறிது கிறிதாகச் சிதறி வருகின்றது. சில சமயம் கணவன் ஓரிடம், குடும்பம் ஓரிடம், பெற்றேர் ஓரிடம், பிள்ளைகள் ஓரிடம்-என்று மாறி வாழவேண்டிய நிலையையும் இன்றைய சமூகத்தில் காணலாம். இங்ங்ணம் குடும்பப் பொறுப்பும் அமைப்பும் ஒரளவு மாறிவருகின்றது; ஆயினும் குடும்பத்தினுள்ளேயிருக்கும் தனிப்பட்ட கணவன்-மனேவிய ரின் உறவு பெற்ருேர் பிள்ளைகளின் சொந்த உறவு நெருங்கி வருகின்றது. அலுவலின் நிமித்தம் கணவனும் மனைவியும் தம் பெற்ருேர்களைவிட்டு வேற்றுார்களில் வாழவேண்டி யிருப்பதால் இருவரிடையே உறவு நன்கு வலுப்படுகின்றது.

திருமணத்தின் நன்மைகள்: நவீன நாகரிக சமூகத்தில் அன்பிற்கு இருப்பிடமாகவும், உள்ளக்கிளர்ச்சிப் பாதுகாப் பிற்காகவும், பாலுறவில் மனநிறைவு பெறவும் மக்கட் செல்வம் அமையவும், வழிவழியாகவரும் மரபுவழிப் பண்பு சரியாக இறங்கவும் திருமணம் இருந்து வருகின்றது; இத் தகைய முக்கிய செயல்களைத் திருமண உறவு-குடும்ப அமைப்பு-நிறைவேற்றி வருகின்றது. பகலெல்லாம் வெளி யிடங்களில் சென்று உழைத்து அலுத்துத் திரும்பும் ஆட வரும் பெண்டிரும் வீட்டில்-குடும்ப அமைப்பில்-ஒர் அமைதியைப் பெறுகின்றனர். கணவன் மட்டிலும் அலுவல் பார்க்கும் குடும்பத்தில் மனைவி இல்லக்கிழத்தியாக இருந்து வீட்டு அலுவல்களேத் திறம்படப் பார்த்து வருகின்ருள்; திரு மணத்தில் குடும்ப விளக்காகத் திகழ்பவளும் அவளே. கணவனும் மனைவியும் தனித்து வாழும் குடும்பத்தில்தான் இருவருக்கிடையே ஆன்மநேய ஒருமைப்பாடும். நமது’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/538&oldid=1285338" இலிருந்து மீள்விக்கப்பட்டது