பக்கம்:இல்லற நெறி.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்வுடைய இல் வாழ்க்கை 5靖g

என்ற உணர்ச்சியும், ஒருவரையின்றி ஒருவர் அமையாமை என்ற எண்ணமும் ஏற்பட்டு இருவருடைய ஆளுமைகளும் நன்கு வளர்ச்சி பெறுகின்றன. இங்குத்தான்,

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே நல்ல பிற .? என்ற வள்ளுவப் பெருந்தகையும் பிறரும்போற்றும் மக்கம் பேறு ஏற்படுகின்றது; இது சமுகத்தினரால் ஒப்புக்கொள் ளப்பெற்ற செல்வமாகும். குடும்பச் சூழ்நிலைதான் குழந்தை களின் உடல், உள்ளவளர்ச்சிகட்கு ஏற்றது என்று உளவிய லாரும் கருதுகின்றனர்; பெற்றேரின் அன்பும் அரவணைப் பும் குழந்தையின் உள்ளக்சினர்ச்கி வளர்ச்சிக்கும் அதன் ஆளுமை வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாதவை என்று நவீன உளமருத்துவ இயலாரும் வற்புறுத்தி வரு கின்றனர். எனவே, மானிட இன மேம்பாட்டில் குடும்பமே பண்பாட்டு, சமூக அடிப்படைக் கூருகத் திகழ்கின்றது. இத்தகைய குடும்பம் சமூக அறத்தின் அடிப்படையில் அமைந்துவிட்டால் அதுவே சாலச் சிறந்ததாகும்.

திருமண முரண்பாடுகள் : இத்தகைய பல நலன்களும் அடங்கியுள்ள இல்வாழ்க்கையில் இக்காலத்தில் கணவன் மனைவி பிணக்குகளும் மண முறிவுகளும் அடிக்கடி நேரிடு கின்றனவே என நீ வினவலாம். இத்தகைய இடையூறுகள் எல்லாக் காலத்திலும்தான் நடைபெற்றன நினைப்பிற் கெட்டாத நெடுங்காலமாகவே ஒரு சிலரிடம் இத்தகைய மன வேற்றுமைகள் நிகழ்ந்துதான் வந்தன. ஆயினும், பண்டைக்காலத்தில் இத்தகைய முரண்பாடுகள் எழினும், குடும்பம் சிதைவுறவில்லை; சமயம், சட்டம், சமூகக் கட்டுப்பாடு ஆகிய புறவிசைகள் திருமணத்தையும் குடும்பத் தையும் சிதையாமல் கட்டுப்படுத்தி வந்தன. இன்று அப் புறவிசைகளால்பொருந்தாத திருமணங்களைக் கட்டுப்படுத்த

9 குறள்-51. 10 o-grungjägar Quéo-Psychiatry,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/539&oldid=598734" இலிருந்து மீள்விக்கப்பட்டது